June 29 2022 0Comment

சும்மா ஒரு செய்தி

சும்மா ஒரு செய்தி

தேன் கூட்டில்
ஒளிந்திருப்பது தேனல்ல.
இமாலய உழைப்பு
கூட்டை பிளந்து வெளியே
வரும் குஞ்சுகள் நமக்கு
உணர்த்துவது
விடாமுயற்சி
பாறைகளின் இடுக்குகளில்
வளரும் ஒவ்வொரு
தாவரமும் நமக்கு சொல்வது
தன்னம்பிக்கை
தோல்வி உங்களை
துரத்தினால் உங்களுக்கு
இருக்கும் ஒரே வழி நீங்கள்
வெற்றியை நோக்கி
ஓடியே ஆகவேண்டும்…
என்ன நடந்தாலும்
கொண்ட கொள்கையில்
உறுதியாய் இருங்கள்…
ஏனென்றால், புதிய பாதையில் பயணிக்க முயற்சிக்கும் போது ஆதரவுகளை விட, எதிர்ப்புகளையும் பயத்தை விதைப்பவர்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
துணிவோடு செயல்பட்டு
வெற்றி பெறுங்கள்.
என்றும் அன்புடன்
டாக்டர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
Share this:

Write a Reply or Comment

nineteen − nineteen =