May 29 2018 0Comment

சீட்_பெல்ட்:

நேற்று சென்னை மேடவாக்கத்தில்

வேலை ஒன்றை

முடிக்க வேண்டி இருந்ததால்

வேளச்சேரி வழியே பயணம்

நான் சீட் பெல்ட் போடாததால்

போலீஸ் நிறுத்திய உடன்

பக்கத்தில் இருந்த

என் நண்பன்

மடக்கிய

போலீசிடம்

தல

ஆளும் கட்சி

தல

என்றதும்

உடனே

அவரும்

தல நாங்க 5 பேரு

மத்தவங்கனா

50 ரூபாய்

வாங்கலாம்

நீங்க

100 ரூபாய்

கொடுக்கணும்

அதுக்கு

கம்மியா கொடுத்தா

வாங்கமாட்டேன்

என்று செல்லமாக

சிணுங்கி

அன்பு

சண்டையிட்டு

100 ரூபாய்

எங்களிடம்

இருந்து

வாங்கி

சென்ற

லாவகத்தை

கண்டு

நான் அதிர்ந்து தான்

போனேன்

அவர் போன

உடன்

தப்பு நம்முடையது

ஏன் அவருக்கு

லஞ்சம் கொடுத்த

அபராதம்

கட்டி

இருக்கவேண்டும் நாம்

என்று

என்

நண்பரிடம்

சொன்ன

உடன்

அவர்

சொன்னது

நான்

ஆளும்

கட்சின்னு

தானே

சொன்னேன்

அள்ளும் கட்சி

என்று சொல்லலியே

அவன் அப்படி

நினைச்சிப்பான்

நான்

சத்தியமா

நினைக்கலை

ஆனா

என்னா

சூப்பரா

என்னா

Technical ஆ

என்னா

உரிமையா

துட்டு

வாங்கினு

போய்ட்டான்

இனி

சீட்

பெல்ட்

போடணும்

இல்லாவிட்டால்

பைன்

கட்டணும்

வாழ்க்கை

எப்படியெல்லாம்

வாழ

சொல்லி

கொடுக்குது

சென்னைக்கு

ஒரு விசில்

போடுங்க

Share this:

Write a Reply or Comment

1 × 5 =