June 23 2018 0Comment

சிவக்கொழுந்தீஸ்வரர் கோயில்:

சிவக்கொழுந்தீஸ்வரர் கோயில்:

சுந்தரரால் தேவாரம் பாடல்பெற்ற சிவாலயமாகும். 

இத்தலத்தின் மூலவர் சிவக்கொழுந்தீஸ்வரர், தாயார் ஒப்பிலாநாயகி. 

மேலும் இத்தலத்தில் ஜாம்புவதடாகம் என்ற தீர்த்தமும், தலமரமாக கொன்றை மரமும் உள்ளன. முன்வினைப் பயனால் ஜாம்பு (கரடி) வடிவம் பெற்ற மகரிஷி ஒருவர் இத்தீர்த்தத்தில் நீராடி சிவனை வணங்கி சாபவிமோசனம் பெற்றதாலேயே இத்தலத்தின் தீர்த்ததிற்கு #ஜாம்புவதடாகம் எனும் பெயர் வந்ததாகச் சொல்லப்படுகின்றது.

 கோயில் தகவல்கள்:

 மூலவர்:சிவக்கொழுந்தீஸ்வரர்

தாயார்:ஒப்பிலாநாயகி

தல விருட்சம்:கொன்றை

தீர்த்தம்:ஜாம்புவதடாகம்

ஆகமம்:சிவாகமம்

சிறப்பு திருவிழாக்கள்:சிவராத்திரி, அன்னாபிஷேகம், ஆருத்ராதரிசனம்

பாடல் வகை:தேவாரம்

பாடியவர்கள்:சுந்தரர்

 வரலாறு:
தொன்மை:1000-2000 வருடங்களுக்கு முன்

 தல புராணம் :

 நாள்தோறும் சிவனடியார்களுக்கு உணவிட்டு பின் உணவருந்தும் வழக்கமுடைய தம்பதிகள் தீர்த்தனகிரி தலத்தில் வாழ்ந்து வந்தனர். அவர்களை சோதிக்கும் பொருட்டு சிவபெருமான் சிவனடியார்களை அவர்கள் கண்களில் படாமல் இருக்கச் செய்தார். 

 தளராமல் சிவனடியாரைத் தேடிய தம்பதியினருக்கு சிவபெருமானே முதியவராக சென்று அவர்கள் தோட்டத்தில் வேலையும் செய்து உணவருந்தினார். 

 அவர் விதைத்த திணைப்பயிர்கள் அன்றே அறுவடைக்குத் தயாராக இருந்தைக் கண்டு தம்பதிகள் சிவபெருமானை அறிந்தனர்.

 தலச்சிறப்பு :

 அனைத்து ஆலயங்களிலும் ஒரே ஒரு சண்டேசுவர நாயனார் மட்டுமே அருள் பாலிப்பார், எனினும் இங்கு இவர் இவரது மனைவியுடன் சேர்ந்து அருள் பாலிக்கின்றார்.

 

Share this:

Write a Reply or Comment

14 − 3 =