September 30 2018 0Comment

சிறகு  பறப்பதற்கே

சிறகு  பறப்பதற்கே

அதிகம் எப்போதும்

ஆச்சரியத்தை

ஏற்படுத்துவதில்லை….

மாற்றம் 

ஒன்றே மாற்றமில்லாதது

வாழும்

ஒவ்வொரு நொடியும்

தான் எத்தனை 

மகத்தான மாற்றங்கள்….

அந்த வகையில்

இந்த மாற்றத்திற்கு 

அடிப்படையே யாரோ 

என்றோ எனக்கு 

சொன்னது தான்

முட்களின் மேல் நின்று 

கொண்டு அழுவதை விட 

நெருப்பில் விழுந்து எரிந்து 

கொண்டே முயல்வது மேல்

விளைவு

இன்று

மறுக்க முடியாத

மகத்தான மனிதனை

அதுவே உருவாக்கி இருக்கின்றது

கருவாக இருந்தபோதே

அடமும் ஆட்டமும் அதிகம்

உருவான பிறகு 

தனியாக

சொல்லவேண்டுமா 

என்ன

உருவானவன்

இன்று

#முக்திநாத்துக்கு 

பயணம்

மற்றொரு

மாற்றத்தை

நோக்கி

நண்பர்கள் 

முப்பது பேருடன்

மீண்டும் பெரிய

நீண்ட விமானப் 

பயணம் 

#விமானம் ஒரு முறை 

ஏற மாட்டோமா

என்கின்ற ஏக்கம் மறைந்து

விமானப் பயணம்

இப்போதும்

எப்போதும்

நிரந்தரமாகிப்

போன பிறகு

ஒரு தேர்ந்த விமானியை 

விட அதிகம் பறந்து

கொண்டிருந்தாலும்

சில சமயத்தில்

அலுப்பையும்

கொடுக்க தான் 

செய்கின்றது…..

ஆனாலும்

அறிந்த

அடியேன் 

கூறுகின்றேன்

அலுப்பை 

முழுவதுமாக

மறக்க கூடிய

பயணமாக 

இருக்கப் போகின்றது

இறந்த பிறகு 

முக்தி கிடைக்குமா

என யாருக்கும்

பூமியில் வசிக்கும்

யாருக்கும் தெரியாது

இருந்து இறந்தாலும்

இறந்து இருந்தாலும்

மகத்தான

உண்மையை வசிக்கும் 

போதே நமக்கு நாமே

புரிந்துக் கொள்ள

இந்த பயணம் 

உதவும் எங்களுக்கு 

என்கின்ற நம்பிக்கை

தென்படுகின்றது

எந்த நம்பிக்கை 

இல்லா

நம்பிக்கை 

இந்த பிறப்பை கொடுத்ததோ

அதே நம்பிக்கை 

இல்லா

நம்பிக்கை 

நாளை பொழுதையும்

நல்லதாகட்டும்

நல்லதாக்கும் 

என்கின்ற நம்பிக்கையுடன்

மீண்டும் ஒரு நெடிய பயணம் 

இன்னும் சற்று நேரத்தில்……

#சிறகு_பறப்பதற்கே

என்பதை 

மீண்டும் மெய்ப்பித்து

மீண்டு வந்து 

மீண்டும் சந்திக்கின்றேன்….

என்றும் அன்புடன்

Dr.ஆண்டாள் பி.சொக்கலிங்கம் 

 

 

 

Share this:

Write a Reply or Comment

14 + seventeen =