January 01 2022 0Comment

சிறகுகள் 20 பிரதோஷம்

சிறகுகள் 20

பிரதோஷம்

மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரதோஷத்திற்காக அழகிய கூத்தர் சன்னதியிலிருந்து..
நற்றுணையாவது நமசிவாயமே..
ஓம் நமோ நாராயணாய….
இரண்டும் ஒன்றே
புரிந்து கொள்வதற்கு பல் முளைத்து இருந்தாலே போதும் முழுவதுமாக.
அறியாமல்
புரியாமல்
புரிந்து கொள்ளாமல்
எத்தனை எத்தனை தற்பெருமைகள்
எத்தனை எத்தனை சண்டைகள்
சகோதர சண்டைகள்
வீட்டிற்கும் நல்லது அல்ல… நாட்டுக்கும் நல்லதல்ல… மதத்திற்கும் நல்லதல்ல…
புரிந்துகொள்ள
புரட்டாசி பிரம்மோற்சவத்தையும்
தூக்கி கொண்டாடுவோம்
மார்கழி திருவாதிரையையும்
நம் வீட்டு திருமணம் போல கொண்டாடி மகிழ்வோம்
சந்தோஷத்தை
பிரதோஷத்தால் பெறலாம்
கூடாரவல்லியால் கூடியும் வாழலாம்
அகிலம் அமோகமாக இருக்க
அகிலாண்டேஸ்வரியும் நமக்கு தேவை
உலகம் ஆனந்தமாக இருக்க ஆண்டாளும் நமக்கு தேவை
உணர்வோம் உயர்வோம்
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
Dr ஆண்டாள் P சொக்கலிங்கம்
May be an image of 3 people and outdoors
Share this:

Write a Reply or Comment

six + 16 =