சிறகுகள் 17
உயிரோடு இருப்பதல்ல வாழ்க்கை
*விசுவ ஹிந்து பரிஷத் தென்தமிழ்நாடு காரியாலத்தில் நடைபெற்று வரும் நித்ய அன்னதான திட்டத்தின் பொறுப்பாளர் ஸ்ரீ வெங்கடேசன்*
*அவர்களுக்கும்
ஸ்ரீலங்காவை சேர்ந்த
Dr ஆண்டாள் P சொக்கலிங்கத்தின் இளைய சகோதரி ஸ்ரீ திவ்யா*
அவர்களுக்கும்
*பெரியோர்கள் ஆசியுடன் இன்று சமயபுரம் மாரியம்மன் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது*
கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் நடந்த பேச்சுவார்த்தையில் துரியோதனன் ஒத்தை ஆள் கிருஷ்ணன் வேண்டாம் கிருஷ்ணனின் மொத்த படை தான் வேண்டும் என்று கேட்டான்
தருமனோ கிருஷ்ணர் மட்டுமே போதும் என்றான்
என் சகோதரி திவ்யாவின் கதையும் அதுவே
ஒத்த ஆள் திவ்யா எனக்கு எதுக்கு.
எனக்கு மனைவியாக
அவள் வருவதாக இருந்தால்
16 கிராம் தங்கம் மேலும் இருந்தால்தான் அது சாத்தியமாகும்
என்று அன்று அவளை நிராகரித்தவனுக்கு தெரியாது
அவள் தான் ஆண்டாள் என்று.
திருமணம் நின்று போன போது நடந்தது சம்பவம்
இன்று திருமணம் நடந்து கொண்டிருப்பது சரித்திரம்
நாளை திவ்யா வெங்கடேசனால் நடக்கப்போவது வரலாறு
என்று ஆண்டாள் என்கின்ற திவ்யாவை தவறவிட்ட சராசரி எண்ணம் கொண்ட அந்த மனிதனுக்கு தெரியாது
ஆண்டாள் வெங்கடேசனை தான் கை பிடிக்க வேண்டும் என்பது விதி என்கின்ற பொழுது
தவற விட்டவனின்
மதி
விதியின் சதியால்
தொலைக்க தானே செய்யும்.
கெடுப்பவனுக்கல்ல
இந்த உலகம்
கொடுப்பவனுக்கே
இந்த உலகம் என
இந்த பூமி மீண்டும் ஒருமுறை மெய்ப்பித்து விட்டது
உயிரோடு இருப்பதெல்லாம் வாழ்க்கை அல்ல
உயிர்ப்போடு இருப்பது மட்டுமே வாழ்க்கை என
மீண்டும் ஒரு முறை தான் வாழ்ந்த வாழ்க்கையை தன்னை நம்பியோர்களும் வாழ
நிரூபித்துக் காட்டியிருக்கின்றாள் உறங்கா அரங்கனின் உயிர் துடிப்பான நம்ம ஆண்டாள் ..
நன்றி என் ஆண்டாள் செல்லமே
வாழ்க வளமுடன்
Dr ஆண்டாள் P சொக்கலிங்கம்