சிந்தை மகிழும் சித்திரை மாதம்!

 
சிந்தை மகிழும் சித்திரை மாதம்!
நமது தமிழர்களை பொறுத்தவரை மிகவும் பழங்காலத்திலிருந்தே மாதங்களை பயன்படுத்தி வருகின்றனர் என்பதை சங்க இலக்கியங்கள் மூலம் அறியலாம்.
தமிழ் மாதங்கள் மொத்தம் பனிரெண்டு ஆகும். பண்டைய தமிழர்கள் இரண்டு வகையாக மாதங்களை குறித்து வந்துள்ளார்கள்.
பூமிக்கு சார்பாக சூரியனின் இயக்கத்தை வைத்தும், பூமிக்கு சார்பாக சந்திரனின் இயக்கத்தை வைத்தும் மாதங்களை கணக்கிட்டார்கள். அவையாவன : சூரிய மாதம் என்றும் சந்திர மாதம் என்றும் வழங்கப்படுகிறது.
தமிழ் மாதங்களில் முதலாமானவள் என்ற சிறப்பை பெற்றவள் சித்திரைத் தாய்.
சித்திரை திங்கள் பிறப்பை ஒட்டியே நாட்டின் மற்ற மாநிலங்களின் புத்தாண்டு கொண்டாட்டங்களும் அமைகின்றன.
சித்திரை பிறப்பதற்கு முன்னர் வீட்டில் கண்ணாடி முன்பாக தட்டில் பலவகையான பழங்கள்பணம்நகைகள்போன்றவற்றை அவரவர் விருப்பத்திற்கேற்ப வைத்து விடுவர்.
காலையில் துயில் நீங்கி எழும்போது அந்தத் தட்டின் எதிரேயுள்ள கண்ணாடியில் கண் விழிப்பர். இது காலம்காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஆண்டு முழுவதும் செல்வம் சேரும் என்று நம்பப்படுகிறது.
சித்திரை முதல் நாளன்று வீடுகளை சாணத்தால் மெழுகி, செம்மண் மற்றும் மாக்கோலமிட்டு வாயிற்படிகளுக்கு மஞ்சள் – குங்குமம் பூசி மாவிலைத் தோரணம் கட்டி சித்திரைத் தாயை வரவேற்க மக்கள் தயாராவார்கள்.
பூஜை அறைகளை அலங்கரித்து விளக்கேற்றி, முக்கனிகளைஇறைவனுக்கு படைத்து வழிபடுவதும், தமிழகத்தின் பல இடங்களில் இன்றும் கடைபிடிக்கப்பட்டு வரும் வழக்கமாக உள்ளது.
Share this:

Write a Reply or Comment

3 + 19 =