October 11 2018 0Comment

சாளக்கிராமம்

சாளக்கிராமம்:

1933ம் ஆண்டில் இந்து மதத்தையும், குறிப்பாக சிவலிங்க வழிபாட்டையும் குறைகூறி #ஆர்தர் மைல்ஸ் என்பவர் ஒரு புத்தகம் வெளியிட்டார்.

பக்கத்திற்குப் பக்கம் இந்து மத பழக்க வழக்கங்களை  “#பகுத்தறிவுப் பகலவன்கள்” குறைகூறுவது போல எழுதினாலும் நிறைய விவரங்களைத் தருகிறார்.

அதில் ஒன்று சாளக்கிராமம் பற்றியது.

ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்தவர் #லண்டன் சுவாமிநாதன்:-

சாளக்கிராமம் என்பது வெழுமூன இருக்கும் ஒரு கல். அதற்குள் விஷ்ணு சக்கரம் போல அச்சு இருக்கும். இது உண்மையில் உயிரியல் அறிஞர்கள் சோதனைக் கூடங்களில் சேர்த்து வைக்கும் படிம அச்சுகளாகும் #FOSSILS. அதாவது மில்லியன் அல்லது கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உரியினங்களின் #கல் அச்சு.

இந்துக்களுக்கு இந்த படிம அச்சுகள் மிகவும் புனிதமானவை. சங்கு சக்கரம் போலப் பதிவான சித்திரம், விஷ்ணுவின் அடையாளம் என்று இந்துக்கள் கருதுவதால் அதற்கு தினமும் அபிஷேகம் ஆராதனை செய்து பூஜிப்பர்.

இது குறித்து ஆர்தர் மைல்ஸ் எழுதிய விஷயங்களை ஆங்கிலத்தில் அப்படியே   காண்போம்:

1.

சாளக்கிராமம் #தோன்றிய கதை:—

ஒரு நாட்டியம் ஆடும் பெண்மணி பேரழகி. அவளுக்கு ஈடு இணையான

அழகுள்ள ஒரு ஆண்மகனும் கிடைக்கவில்லை. ஆகை யால் இமய மலைக்குப் போய்த் தவம் செய்வோம் என்று புறப்பாட்டாள்.

அங்கு #விஷ்ணு வந்தார். அவருடைய பேரழகைக் கண்டவுடன் இந்தப் பெண் தவத்தை எல்லாம் விட்டுவிட்டு அவரிடம் சென்று என்னைத் திருமண ம் செய்து கொள்ளுங்கள் என்றார்.

அவரோ மானுடனாகப் பிறந்த நடன மாதுவைக் கைப்பிடிக்க விரும்பவில்லை. இருந்த போதிலும் இப்படிப்பட்ட பேரழகியை விடக்கூடாதென்று ஒரு வழி கண்டுபிடித்தார்.

பெண்ணே நீ #கண்டகி நதியாகப் (GANDAKI RIVER) பிற ந்து வா. நான் அங்கே கிடக்கும் சாலக்ராமமாக அவதரிக்கிறேன். நீ என்னை எப்போதும் தழுவிச் செல்லலாம் என்றார்.

இந்தக்தையின் #உண்மைப் பொருள்: நேபாள நாட்டிலுள்ள கண்டகி நதியில்தான் அதிகமாக இவ்வகை படிம அச்சுகள் FOSSILS கிடைக்கின்றன. அது விஷ்ணுவின் அம்சம். அதை உணர்த்த இந்தப் புனைக்கதை உருவாக்கப்பட்டது. இந்துக்கள் எதையுமே நேரடியாகச் சொல்லாமல் அடையாள க் குறி யீட்டுகளால் (symbolic story) காட்டுவர் அப்படிப்பட்ட ஒரு கதை இது.

#வீடுகளில் வைக்கும் முறை:

பொதுவாக, வீடுகளில் வைத்து வழி படுவதற்குரிய சாளக்கிராம கற்களை, வழிபாட்டுக்கு தகுந்த பெரியோர்களிடமிருந்து பெற வேண்டும் என்பது நியதியாகும்.

சாளக்கிராமம் பற்றிய தனித்தன்மைகளை அறிந்தவர்களிடம், அவற்றின் வண்ணம், ரேகைகள், குறிகள் ஆகியவை பற்றி நன்றாக ஆராய்ந்த பிறகு, அவர்களுடைய அறிவுரையின் பேரில் வாங்குவது என்பதே பல நன்மைகளை தரக்கூடியதாகும்.

சாளக்கிராமம் பூஜிக்கப்படும் இடத்தில் சகல இறை #சக்திகளும் நித்திய வாசம் செய்வதாகவும், அங்கே சகல #செல்வங்களும் விருத்தியாவதாகவும் ஐதீகம்.

சாளக்கிராம பூஜை செய்வது எளிதானது. குளித்து முடித்து, #தூய ஆடை அணிந்து பக்தியுடன் மரப்பெட்டியில் வைக்கப்பட்ட சாளக்கிராமத்தை எடுத்து, சிறிய அளவில் அபிஷேகம் செய்து, ஊதுபத்தி காட்டி, இனிப்பை நைவேத்தியமாக படைத்து, நமக்கு தெரிந்த மந்திரங்களைச் சொல்லி வழிபடலாம்.

#துளசி இலை சமர்ப்பிக்கலாம்.

வெளியூர் செல்ல வேண்டிய சமயங்களில் பச்சரிசியை ஒரு தட்டில் கொட்டி, அதன்மீது சாளக்கிராமத்தை வைத்து விட்டு செல்வது வழக்கம்.

சாளக்கிராமத்துக்கு அபிஷேகம் செய்த நீரை தலையில் தெளித்துக் கொண்டால் வைகுண்ட பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

பொதுவாக விக்கிரகங்கள் சேதம் அடைந்து விட்டால், அதை நீர் நிலைகளில் சேர்த்து விடுவார்கள்.

அதற்கு பதிலாக வேறு விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்து வழிபடுவது நியதி. ஆனால், சாளக் கிராம கற்கள் பின்னப்பட்டிருந்தாலோ, அல்லது விரிசல்கள் இருந்தாலோ அதை செப்பு, வெள்ளி கம்பிகள் வைத்து கட்டி, பூஜைக்கு பயன்படுத்தலாம்.

அபிஷேகமும், ஆராதனைகளும் செய்யலாம். வீட்டில் ஆண்களும், பெண்களும் தினமும் சாளக்கிராமத்தை பூஜிக்க வேண்டும்.

Share this:

Write a Reply or Comment

19 + five =