சாளக்கிராமம்:
சாளக்கிராமம் என்பது கண்ணனின் நிறம் கொண்ட கல் ஆகும்.
இது இந்துக்களால் #திருமாலின் அருவத் தோற்றமாகக் கண்ணனை வழிபடப்படும் சிறப்புக் கல் இதுவாகும்.
இந்து சமயம் பெரும்பாலும் உருவ வழிபாட்டைக் கொண்டிருந்தாலும் சிவனை சைவர்கள் லிங்க வடிவில் வழிபடுவதுபோல வைணவர்கள் திருமாலை சாளக்கிராமக் கற்களில் வழிபடுகின்றனர்.
இந்தப் புனிதக் கற்கள் நேபாளத்தின் முக்திநாத் பகுதியில் கண்டகி ஆற்றங்கரைகளில் காணப்படுகின்றன.
இக்கற்களில் இயற்கையாகவே திருமாலின் சங்கு, சக்கரம், கதை, தாமரை போன்ற உருவங்கள் காணப்படுகின்றன. இவை நெடுங்காலமாக கோவில்கள், மடங்கள், வீடுகளில் வைக்கப்பட்டு வழிபடப்படுகிறது.
#சாட்சியாக சாளக்கிராமம்
நமது நாட்டில் மன்னர்களது ஆட்சி நடந்த சமயத்தில் நகர சபைகள் மற்றும் ஊர் சபைகள் ஆகியவற்றில் நடக்கும் வழக்கு களில் சாட்சி சொல்லுபவர் கைகளில் சாளக்கிராம கற்களை கொடுத்து சாளக்கிராமத்தை முன்வைத்து அவரது சாட்சியை ஏற்றுக்கொள்ளும் வழக்கம் இருந்துள்ளது.
#கருட புராணம்:
மரண காலத்தில் சுயநினைவுடன் சாளக்கிராமத்தை மனதால் வணங்குபவன் பாவங்களில் இருந்து விடுபடுகிறான் என்றும், இறக்கும் போது சாளக்கிராம தீர்த்தத்தின் ஒரு துளி தீர்த்தத்தை அருந்தி உடலை விடுவோர் வைவஸ்வதம் என்ற தர்மராஜரின் நகரில் யமதர்மராஜனால் மரியாதை செய்யப்பட்டு புண்ணிய உலகிற்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
பண்டைய இந்தியாவில் சிறந்து விளங்கிய #அவந்தி தேசம் எனப்பட்ட இன்றைய நேபாள பகுதியின் இமயமலை அடிவாரத்தில், ‘#ஹரி பர்வதம்’ என்ற மலை உள்ளது.
அங்கே சங்கர தீர்த்தம் என்னும் பகுதியில் பாயும், கண்டகி நதியில் சாளக்கிராம கற்கள் உற்பத்தியாகின்றன.
#தாமாக தோன்றும்
சாளக்கிராமம், கண்டகி நதியில் தாமாக தோன்றுகின்ற ஒருவகை அழகிய தெய்வீக அம்சம் நிறைந்த கற்களாகும். அவை பல வடிவங்களிலும், பல வண்ணங்களிலும் கிடைக்கின்றன.
மகாவிஷ்ணுவே தங்க மயமான ஒளி பொருந்திய ‘வஜ்ரகிரீடம்’ என்ற புழுவாக வடிவம் எடுத்து, சாளக்கிராம கற்களை குடைந்து, அதன் மையத்திற்குச் சென்று, ஓம்கார சப்தம் எழுப்பியபடி, தனது முகத்தினால் பல்வேறு அடையாளங்களை உண்டாக்குவதாகச் சொல்லப்படுகிறது.
அவ்வாறு தோன்றிய சாளக்கிராம கற்களில், நாராயணனின் ஜீவ ஸ்வரூபம் ஐக்கியமடைந்து இருப்பதன் காரணமாக மகாவிஷ்ணுவின் அவதார வடிவமாகவே அவை பக்தர்களால் போற்றப்படுகின்றன.
மேலும் சாளக்கிராம கற்களில் தோன்றக்கூடிய அடையாளங்கள் மற்றும் வண்ணங்களுக்கேற்ப அவற்றின் பெயர்களும், பூஜை முறைகளும் வித்தியாசப்படுகின்றன.
சாளக்கிராமம் என்பது நெல்லிக்கனியின் அளவில் இருந்து ஆறு அடிக்கும் மேலான உயரம் கொண்டதாக இருக்கும்.
சாளக்கிராம சிலைகள் மூலவராக இருக்கும் ஆலயங்கள், பக்தர்களுக்கு விரைவில் பலன் தருவதாக நம்பப்படுகிறது. நேபாளத்தில் உள்ள முக்திநாத் என்னும் சாளக்கிராம தலம், தாமே சுயம்புவாக தோன்றியதால் ‘ஸ்வயம் வியக்தம்’ என்னும் சிறப்பினைக் கொண்டு விளங்குகிறது.
அங்கு இறைவன் நிரந்தரமான நிலையில், நித்ய சாந்நித்யமாக எழுந்தருளியிருக்கிறார் என்று வைணவ பெரியோர்களால் குறிப்பிடப்படுகிறது.
மேலும், பல ஆலயங்களில் மூலவருக்கு வெள்ளி அல்லது தங்கப் பூண்களுடன் கூடிய சாளக்கிராம மாலைகளும் அணிவிக்கப்படுவது வழக்கம்.
கோவில்களில் இருக்கும் சாளக்கிராம மூர்த்திக்கு பூஜை முடிந்த பிறகு, மூலவர் மற்றும் இதர தெய்வங்களுக்கு அன்றாட பூஜைகள் நடப்பது வழக்கமாகும்.
Share this: