January 20 2022 0Comment

சாரல் 6

சாரல் 6

மீண்டும் ஒரு நாய் கதை!!!!!!
முகக் கவசம் இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ்ந்த நாம்
இனி வாழ் நாள் முழுதும் முகக்கவசம் உடன் தான் வாழ்ந்தாக வேண்டும் போல.
இயற்கையை சீரழித்த நமக்கு இந்த தண்டனை போதாது
நிலைமை இப்படியே நீடித்தால்
முக கவசம் ஊரடங்கு வாழ்வின் ஓர் அங்கமாக மாறியது போல இன்னும் என்னவெல்லாம் கட்டுப்பாடு வரப் போகின்றதோ என்பதை நம்மை இந்த உலகிற்கு கொண்டு வந்த சக்தியே அறியும்.
மனிதனுக்கு முகக்கவசம் சானிடைசர் தடுப்பூசி என்று பத்து விஷயங்கள் அவசியம் என்று வலியுறுத்தப்படுகின்ற இந்த சூழ்நிலையில்
இவை எதுவும் இல்லாமல்
சர்வ சுதந்திரத்துடன்
நாம் வசிக்கும் இடங்களிலேயே வாழும் காக்கா குருவி எலி கிளி மைனா குரங்கு ஆடு மாடு கோழிகளுக்கு
எந்த பாதிப்பும் வாராதா???
ஒரு கால் வந்தால் அதன் மூலம் நமக்கு பரவுமா???
ஒரு கால் வராது என்றால்
அவைகளுக்கு நம்மைவிட இறைவன் என்ன பெரிய சக்தியை கொடுத்துள்ளார்?????
பலம் வாய்ந்த சிங்கங்கள் கூட வேடனின் பொறியில் மாட்டிக்கொள்ளும்
ஆனால் நரிகள் மாட்டுவதில்லை.
சாதூர்யமாக இருப்பதால்
இங்குப் பொறிகளே அதிகமுள்ளன..
எனவே நம்மையும் நரியாக்கி சாதூர்யமாக மாற்ற வேண்டும் நம்மை படைத்த சக்தி..
சக்திகொடு
என்றும் அன்புடன்
Dr ஆண்டாள் P சொக்கலிங்கம்
Share this:

Write a Reply or Comment

3 × five =