November 22 2021 0Comment

சாரல் 3 பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சாரல் 3 பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இன்று (22 11 2021) பிறந்தநாள் காணும் எனது அருமை நண்பர் திரு அசன் முகமது ஜின்னா
( Tamil Nadu State Public Prosecutor)
அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்

வாழ்த்துக்கள்
இறை மார்க்கத்தில் சரணாகதியின் உச்சகட்டம் ஆண்டாள் என்றால்
நான் இதுவரை கண்ட லௌகீக வாழ்க்கை முறையில் சரணாகதியின் உச்சகட்டம் ஜின்னா அவர்கள்
வரம்பின்றி விளிம்பின்றி
தன்னை நேசிப்பவர்
மனிதனுக்குள் மனிதம் விதைப்பவர்
எதிர்பார்ப்பில்லாத எளிமையான மனிதரான ஜின்னாவிற்கு
எத்தனையோ சோதனைகள்
வந்த போதும் அத்தனையையும் கடவுள் துணையோடு எதிர்கொண்டு
அதில்
வெற்றியும் பெற்று
சீரிய வாழ்க்கை
வாழ்ந்து கொண்டிருப்பவர்
மதம் இருவருக்கும் வேறாக இருந்தாலும் நான் அழைக்கும் போதெல்லாம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு மறுப்பேதும் சொல்லாமல் வந்திருந்து ஆண்டாள் கோயிலின் கலையம்சங்களையும், தமிழர்களின் பாரம்பரியமிக்க கலை திறனையும் ரசித்து வியப்பவர் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் எப்போதும் என்கின்ற பிரார்த்தனையை அடிப்படையாய் கொண்டவர்.
கொரோனாவின் கோர தாண்டவத்தின் போது அனைத்து மக்களுக்கும் நிறைய உதவிகளை செய்தவர்.
பள்ளிவாசல், தர்கா போன்ற வழிபாட்டுதளங்களில் பணியாற்றுகின்றவர்களுக்கு மட்டும் உதவிகள் செய்திடாமல் உச்சகட்ட சமூக நல்லிணக்கத்திற்கு உதாரணமாக கோவிலில் வேலை பார்க்கும் ஏழை பிராமணர்கள் என்ன செய்வார்கள் இந்த வேளையில் என்று அவர்களுக்கான உதவிகளையும் யாருக்கும் தெரியாமல் அவர் பெயர் வெளியே வரக்கூடாது என்ற கட்டளை பிறப்பித்து உதவிகள் பல செய்தவர் அத்திக்கடையின் அதிசய,அற்புத மனிதர் ஜின்னா
இதுவும் கடந்து போகும் என்று அடிக்கடி சொல்லும்
எனக்கு எதுவும் கடந்து போகும் என்று புரிய வைத்தவரான ஜின்னா அவர்களுக்கு
நம் தாய் ஆண்டாள்
மிக சிறந்த
மிக ஆரோக்கியமான
மிக நிம்மதியான
மிக நிறைவான
மிக மகிழ்ச்சியான
மிக செல்வ செழிப்பான
மிக பிரம்மாண்டமான
வெற்றிகளை உள்ளடக்கிய
வாழ்க்கையை திரு ஜின்னா அவர்களுக்கும்
அவர் குடும்பத்தினருக்கும் கொடுக்க வேண்டும் என மனதார பிரார்த்திக்கின்றேன்
என்றும் அன்புடன்
Dr ஆண்டாள் P சொக்கலிங்கம்

 

May be an image of 2 people and people standing

Share this:

Write a Reply or Comment

three × 2 =