June 18 2022 0Comment

சாமி…

சாமி…

புதுசா கல்யாணம் ஆன கணவன் மனைவி இடையே ஒரு பந்தயம்..

இன்று ஒரு நாள் மட்டும்

யார் வந்தாலும் கதவை திறக்க கூடாது என்று முடிவெடுத்தனர்”……!!

பந்தயம் என்று முடிவெடுத்த அன்றே

கணவனுடைய அம்மா,அப்பா வந்தனர்.

இருவரும் அவர்கள் வருவதை
ஜன்னல் வழியாக பார்த்துவிட்டனர்.

இருவரும் ஓருவரை ஓருவர் பார்த்து கொண்டனர்.

“கணவனுக்கு கதவை திறக்க வேண்டும் என்ற ஆசை”

ஆனால் ,

ஒப்பந்தம் போட்டு விட்டதால்
அதை மீற மனமின்றி கதவை
திறக்க வில்லை அவன்.

அவர்களும் வீட்டில் யாரும் இல்லை என்று நினைத்து
திரும்பி போய் விட்டனர்.

கொஞ்ச நேரம் கழித்து
மனைவியின் அம்மா அப்பா வந்தனர்.

கதவை தட்டினார்கள்….

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்”……..

ஆனால்,

” மனைவிக்கு கண்கள் கண்ணீரால் குளமானது”.

அவள் தன் கணவனிடம் என்னால் இனி கதவை திறக்காமல் இருக்கமுடியாது என்று சொல்லி கதவை திறந்து விட்டாள்.

கணவன் வெற்றி பெற்ற சந்தோஷத்தில் மனைவியை லேசாக கிண்டல் செய்துவிட்டு வேறு எதுவும் சொல்லாமல் அந்த நிகழ்வை கடந்து சென்று விட்டார்.

வருஷங்கள் உருண்டோடின…..
இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தை பிறந்தது..!!

மூன்றாவதாக சிறிது காலத்துக்குப் பிறகு பெண் குழந்தை ஒன்றும் பிறந்தது.

கணவன் பெண் குழந்தை பிறந்த சந்தோஷத்தில்
பெரிய அளவில் செலவு செய்து
அனைவருக்கும் பார்ட்டி கொடுத்து கொண்டாடினான்.

அதற்கு மனைவி ,
இரண்டு ஆண் குழந்தை பிறந்த போது இவ்வளவு பெரிய அளவில் கொண்டாட வில்லை;பெண் குழந்தை பிறந்தவுடன் இவ்வளவு பெரிய பார்ட்டி கொடுக்கிறீங்களே ஏன்? என்று கேட்டாள்.

அதற்கு கணவன்

ரொம்ப நிதானமாக சொன்னான்:

எதிர்காலத்தில்
எனக்காக கதவை திறக்க
ஓரு சாமி(பெண்) பிறந்துவிட்டாள்
என்றான் கர்வத்துடன்….!!!

பெண்களை பெற்ற அனைவருக்கும் சமர்ப்பணம்🙏🙏🙏

என்றும் அன்புடன் மற்றும் கண்ணீருடன்…..

Dr ஆண்டாள் P சொக்கலிங்கம்

 

Share this:

Write a Reply or Comment

3 + five =