July 25 2022 0Comment

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்

ஒருவர் தனது விலையுயர்ந்த
காரை தனது வீட்டின் முன்பாக வீதியில் நிறுத்தியிருந்தார்

அந்த வழியாகச் சென்ற தெரு நாய் ஒன்று அதன் மீது சிறுநீர் கழித்தது
இதைப் பார்த்த கார் உரிமையாளர் சிரித்தார்

இதனைப் பார்த்து
கொண்டிருந்த ஒருவர் ஐயா நீங்கள்
ஏன் நாயைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கின்றீர்கள் என்று ஆச்சரியத்துடன் கேட்டதற்கு…

அந்தக் காரின் உரிமையாளர் மிகவும் சாந்தமாக நாய் அதன் அறிவிற்கு எட்டியதைச் செய்கின்றது

அதற்கு இக்காரின்
மதிப்பை பற்றித் தெரியாது
சொன்னாலும் அதற்குப் புரியாது என்று சிரித்துக் கொண்டே கூறினார்

கேள்வி கேட்டவர் இப்படி ஒரு
பதிலை சற்றும் எதிர்பார்க்கவில்லை

இது போல தான் நம் வாழ்விலும் நம் மதிப்பை அறியாதவர்கள் நம்மை அவமானப்படுத்தும் போதும்
கேலி செய்யும் போதும் அவர்களைப் புன்னகையுடன் கடந்து செல்லுங்கள்
அவர்களைக் கண்டு கொள்ளாதீர்கள்

உங்கள் கடமை எதுவோ
அதைச் செய்யுங்கள்

சுய மதிப்பு
தன்னறிவு
தன்னடக்கம்
இவை மூன்றும், வாழ்வின் மிக உயர்ந்த எல்லை வரை
நம்மை அழைத்துச் செல்லும்

கடவுள் எப்பொழுதுமே உடைந்த பொருள்களை ரொம்ப அழகாக
பயன்படுத்திடுவார்

உடைந்த மேகங்கள் தான்
மழை பொழியும்…

உடைந்த நிலம் தான்
உழும் வயலாகும்…

உடைந்த நெல் தான் விதையாகும்…

உடைந்த விதைகள் தான்
புதிய செடிகளுக்கு
வாழ்க்கை கொடுக்கும்…

அதனால் எப்போதாவது உங்களைப் பற்றி சரியாக புரிந்து கொள்ளாமல் மரியாதை
தெரியாமல் நடத்தப்பட்டால்
உடைந்து நொறுங்கினால் நம்புங்கள்…

கடவுள் உங்களை பெரிய விஷயத்திற்கு தயார் படுத்துகிறார் என்று…

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்

Dr ஆண்டாள் P சொக்கலிங்கம்

 

Share this:

Write a Reply or Comment

17 − 12 =