ஸ்ரீ
கேள்வி: – கோவிலில் இருந்து மண், கல் எடுத்து வந்து வீட்டில் வைத்தால் சொந்த வீடு கட்ட யோகம் வந்து விடும் என்றும் வீடு கட்டும் போது ஜோதிடர்கள் சொல்லும் கோவிலில் இருந்து மண் எடுத்து வந்து வீட்டின் வடகிழக்கு மூலையில் போட்டு பூஜை செய்து வேலையை ஆரம்பித்தால் வாழ்வு சுபிக்க்ஷமாக இருக்கும் என்று சொல்லப்படுகின்றதே. இது பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: – இது மொத்தத்தில் அபத்தமான, அயோக்கியத்தனமான முட்டாள்தனமான, அருவெறுக்கதக்க, வடிகட்டிய மூட நம்பிக்கை.
ஒருவருக்கு வீடு கட்ட ஆசையிருந்தால் வாஸ்துபடி நன்கு கட்டிய வீட்டை கொடுத்த கடவுளுக்கு நன்றி என அவர் சரணாகதி அடைந்த தெய்வத்திடம் கூறினால் நல்ல வாஸ்துபடி வீடு கண்டிப்பாக கிடைக்கும். அதை விடுத்து கோவிலில் இருந்து மண்ணையோ, கல்லையோ எடுத்து வந்து வீட்டில் வைத்தால் தான் வீடு கட்ட முடியும் என்றால் அதை திருட்டுத்தனம் என்று தான் சொல்ல முடியும். வீடு கட்ட வேண்டும் என ஆசைப்பட்ட பிறகு, வீடு கட்ட முடிவெடுத்த பிறகு திருட்டுடன், அதுவும் கோவில் சொத்தை திருடிய பழியுடன் வாழ்க்கையை ஆரம்பிப்பது சரியா என்பதை உங்கள் முடிவிற்கே விட்டு விடுகின்றேன்.
திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;
தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம்
ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!
நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!
வாழ்க வளமுடன்
என்றென்றும் அன்புடன்
ஆண்டாள் பி. சொக்கலிங்கம்