October 28 2018 0Comment

சபரிமலை

சபரிமலை
சபரிமலை குறித்து உச்சநீதி மன்றம்
தீர்ப்பு சொல்லி விட்டது
அதனால் வேறு வழியே இல்லை
உடனே அதை கேரள அரசு அதை
நிறைவேற்றி தானே ஆக வேண்டும்
வேறு என்ன செய்ய முடியும்
என்று கேட்பவர்களுக்கு மட்டுமே இந்த பதிவு.
கேரளாவில் ஒரு வழக்கு:
ஒரு சர்ச் யாருக்கு சொந்தம் என்று இரண்டு பிரிவுகளுக்குள் தகராறு வந்தது
சிரியன் ஆர்த்தடாக்ஸ் மற்றும் ஜாக்கோபைட் என்று இரு பிரிவும் சுப்ரீம் கோர்ட் வரை சென்றனர்…
ஆர்த்தடாக்ஸ் பக்கம் தீர்ப்பு ஆகி விட்டது.
ஆனால் இதை பொறுக்காத ஜாக்கோபைட் தரப்பு
லட்சம் பேரை கூட்டி ஒரு பேரணி நடத்தி காட்டியது.
இதெல்லாம் எப்பொழுதோ
நடந்தது இல்லை.
நடந்தது சென்ற ஜூலை மாதத்தில் தான்.
அந்த தீர்ப்புக்கு இதே பிணராயி அரசு
என்ன சொன்னது தெரியுமா ?
இப்பொழுது சொல்வது போல்
என்ன ஆனாலும் சரி
நிறைவேற்றியே தீருவோம்
என்று மார் தட்டவில்லை.
பின் என்ன செய்தது
இது மிக உணர்ச்சி பூர்வமான விஷயம்.எந்த தரப்பும் பாதிக்க படாமல் இருக்க வேண்டும்
உடனே தீர்ப்பை அமல்படுத்தினால் பலர் தற்கொலை செய்து கொள்ளக் கூடும்.
எனவே இதை பேசி சுமுகமாக தீர்க்கிறோம்.
உடனே உத்தரவை அமல் செய்ய சொல்லாதீர்கள் என்று அவகாசம் கேட்டது.
லட்டியால் அடித்து துரத்தி தீர்ப்பை அமல் செய்ய சொல்லவில்லை
காரணம் அவர்கள் ஹிந்துக்கள் அல்ல.
ஒரு கண்ணில் வெண்ணை. மற்றொரு கண்ணில் சுண்ணாம்பு.
என செயல்படும் பிணராயி அரசுக்கு
பினாயில் ஊத்தி கழுவ வேண்டிய நேரம் வந்து விட்டது..
கம்யூனிஸம் ஒழிய வேண்டிய நேரம் வந்து விட்டது
கம்யூனிஸத்தை ஒழிக்க வேண்டிய நேரம் இது
கேரளாவில் மட்டும் அல்ல
இந்தியாவில் இருந்தே கம்யூனிஸம் அழிக்கப்பட வேண்டும்
முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவ சகோதரர்களே
உங்களின் சக சகோதரனுக்கு இப்போது
பிரச்சினை என்று நீங்கள் அமைதியாக இருந்தால்
நாளை உங்களுக்கு இதுபோல் ஒரு பிரச்சினை வரும் போது
உதவ கம்யூனிஸம் கூட வராது
ஹிந்து சகோதர்கள் தான் வருவார்கள்
எனவே உங்கள் மதத்தில் உள்ள புல்லுருவிகளை
முதலில் அகற்றுங்கள்.
இது கடவுள் நம்பிக்கைக்கு எதிராக கடவுள் மறுப்பாளர்கலால்
நடத்தப்படும் போர்.
எம் வெற்றி
நம் வெற்றி
என்பதை
கவனத்தில் இருத்தி கொள்ளுங்கள்…
Dr.ஆண்டாள் P சொக்கலிங்கம்
Share this:

Write a Reply or Comment

19 + 9 =