May 29 2018 0Comment

சந்தோஷம்

சந்தோஷம்

எனக்கு பரிச்சயமானவர்கள் வாஸ்து பார்க்க என்னை அழைத்து அதன்பின் அதனால் அவர்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு பின்னர் அவர்கள் நம்மிடம் பேசும்போது ஏற்படும் பூரிப்பிற்கு ஈடு இணை இவ்வுலகில் எதுவும் இல்லை – அனுபவித்து பார்த்தவர்களுக்கு புரியும் இந்த உண்மை.

எந்தவித எதிர் கேள்வியும் இல்லாமல் சொன்னதை அப்படியே செய்யக்கூடிய வாடிக்கையாளர்கள் பலருண்டு.

அதில் சிலருக்கு வாஸ்துவை விட என் மேல் ஈடுபாடும் அதிகம்; நம்பிக்கையும் அதை விட அதிகமாக இருக்கும்.

அந்த வகையில் என் மேல் நம்பிக்கையும், ஈடுபாடும் வைத்து உள்ள சாமான்யர்கள் தான் நான் இவர்களை முதலில் பார்த்த போது,

அவர்களுடைய நேர்மையான, நேர்மறையான சிந்தனைகள் நான் அவர்களுக்கு வாஸ்து பார்த்த பிறகு அவர்களை அடுத்த கட்டம் பிரயாணிக்க வைக்கின்றது.

பின் ஒரு கால கட்டத்தில், தென்காசி கோகுலம் காலனியில் ஒரு சிறந்த வடகிழக்கு மனை / தென்மேற்கு மலை உள்ள இடத்தை வாங்குகிறார்கள். வாங்கிய மனையில் ஆண்டாள் வாஸ்து படி அவர்கள் கட்டி கொண்டிருக்கின்ற வீட்டை நண்பர்கள்

மல்லசமுத்திரம் சங்கர்

நாமகிரிப்பேட்டை செந்தில்ராஜா

வாசுதேவநல்லூர் முத்துக்குமார்

கோவில்பட்டி வரதா R.பாலாசுப்பிரமணியன்

மற்றும் நெல்லை ராஜீவ் ஹமீது

அவர்களுடன் பார்த்தபோது எடுத்த படங்கள்….

சந்தோஷம்:

ஆண்டாள் வாஸ்து படி வீடு கட்ட ஆரம்பித்த உடன் ஒரு பெரிய பள்ளி அவர்களுக்கு Canteen Order கொடுக்கின்றது.

சுவையான உணவு – சிறந்த முறையில், வாங்குவோருக்கு ஏற்ற விலையில்,
அதுவும் குழந்தைகளுக்காக சமையல் வாய்ப்பு என்கின்ற ஒரு விஷயம், திருப்பதி பெருமாளை மகா துவாரத்தின் வழியே சென்று, பல மணி நேரம் அவர் பக்கத்தில் இருந்து பார்த்து விட்டு வரும் சுகானுபவத்தை விட பெரியது.

வாழ்க வளமுடன்…

ஆண்டாள் வாஸ்துவின் துணையுடன்…

Share this:

Write a Reply or Comment

6 + 19 =