August 03 2022 0Comment

சந்திப்பு

சந்திப்பு

தமிழக அரசின் முன்னாள்
வேளாண் துறை அமைச்சரும், போளூர் சட்டமன்ற உறுப்பினரும், தற்போதைய சட்டமன்ற
அஇஅதிமுகவின்
துணைச் செயலாளரும்,
அஇஅதிமுகவின் திருவண்ணாமலை
மாவட்ட செயலாளரும் ஆன
அன்பு சகோதரர் அண்ணன்
திரு அக்ரி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மரியாதை நிமித்தமாக நேற்று (01/08/22) ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவையின் சென்னை தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த போது எடுத்த படம்.

என்னிடம் தனிப்பட்ட முறையில் பெரிய அன்பை கொண்ட அண்ணனுக்கு அவருக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரத்துக்கு வாழ்த்துக்கள் சொல்லி உரையாடிக் கொண்டிருந்தபோது ஒரு விஷயம் தெளிவாக புரிந்தது.

ஆண்டாள் இல்லாவிட்டால் எப்போதும் போல் அனாதையாக
தான் இருந்திருப்பேன் நான்.

காரணம் ஆண்டாள் என்கின்ற ஒரு விஷயம் தான் என்னையும் அண்ணனையும் 12 வருடங்களுக்கு முன் இணைத்தது.

கடுமையான வேலை பளுவிற்கு இடையே இன்று கூட அண்ணன் அவர்கள் என்னை பார்க்க வந்ததற்கு மிக முக்கிய காரணம் நேற்று
ஆடி பூரம் என்றதும் என் ஞாபகம் வந்ததால் தான் என்று அவர் சொன்ன போது நெகிழ்ந்து போய்விட்டேன்

அந்த வகையில் ஆண்டாள் பக்தர்கள் இருவரில் ஒருவர் இன்றைய அரசியலில் மாநில அளவில் உச்சத்தில் இருந்தாலும்
ஆண்டாளுக்கு எப்போதுமே நான் அடிமை என்ற எண்ணம் கொண்ட அண்ணனை என்னவென்று சொல்வது.

என்னை இயக்குவது ஆண்டாள் என்றாலும் என்னை மட்டும் அல்லாமல் அவளை நேசிக்க கூடிய கோடிக்கணக்கான பேரையும் என்னை இயக்குவது போலவே லயித்து ரசித்து இயக்குவது அவள் தான் என்கின்ற பெரிய உண்மையை புரிந்து கொண்டு
கனத்த இதயத்துடன்
நீண்ட உரையாடலுக்கு பிறகு
அண்ணனை வழி அனுப்பி வைத்தேன்.

ஆண்டாளுக்கு
என் மனமார்ந்த நன்றி
எல்லா புகழும் ஆண்டாளுக்கே நரசிம்மன் திருவடிகளே சரணம்

என்றும் அன்புடன்

Dr ஆண்டாள் P சொக்கலிங்கம்

 

Share this:

Write a Reply or Comment

four × five =