கேப்டன் விஜயகாந்த் – ஒரு பார்வை

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்

அனைவருக்கும் வணக்கம்…

Vastu - Captain Vijayakanth

சமீபத்தில் தே.மு.தி.க. நிர்வாகிகள் தமிழக காவல்துறை உயர் அதிகாரி ஒருவரை சந்தித்து திரு.விஜயகாந்த் அவர்களை பற்றி அவரை எதிர்க்கும் கட்சிகள் மேற்கொள்ளும் அவதூறு பிரசாரத்தை தடுத்து நிறுத்திடுமாறு கேட்டு கொண்டதாக பத்திரிகையில் படித்தேன். இது விஷயமாக எனக்கு நன்கு தெரிந்த கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களை பற்றிய தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான சரியான தருணமாக இந்த தருணத்தை கருதுகின்றேன்.

  1. எனக்கு 6 வருடங்களாக கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களை மிகவும் நன்றாக தெரியும். அவரை அவரின் கட்சி அலுவலகத்திலும், அவருடைய சாலிகிராமம் வீட்டிலும் நிறைய தடவை சந்தித்து பலமணி நேரம் பேசி இருக்கின்றேன்.
  2. தே.மு.தி.க – வை பொறுத்த வரை அவருடைய மனைவி திருமதி.பிரேமலதா விஜயகாந்த், திரு.L.K.சுதீஷ் மற்றும் தே.மு.தி.க – வின் மிக முக்கியமான நிர்வாகிகள் அனைவருக்கும் என்னை தெரியும். அவர்கள் அனைவரும் இன்றுவரை என்னிடம் மரியாதை கலந்த நல்ல நட்புடன் பழகி வருகின்றனர்.

அந்த வகையில்

திரு.விஜயகாந்த் அவர்களைப் பற்றி எனக்கு நன்கு தெரிந்த உண்மை தகவல்கள் உங்கள் பார்வைக்காக:-

  1. இதற்கு முன் எப்படி என்று எனக்கு தெரியாது. எனக்கு கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களை கடந்த 6  வருடங்களாக மிக நெருக்கமாக தெரியும். எனக்கு நன்கு தெரிந்த கடந்த 6 வருடங்களாக அவர் மது அருந்துவதில்லை. ஒரு சொட்டு அளவிற்கு கூட மது அருந்தவில்லை என்பதை என்னால் அறுதியிட்டு, உறுதியிட்டு கூற முடியும். ஒரு முறை இந்த விஷயத்தை பற்றி நான் தமிழ்நாட்டின் மிகப்பெரிய அரசியல் தலைவரிடம் பேச நேரிட்ட போது அவர் முதலில் நான் சொன்ன தகவலை அறவே நம்ப மறுத்துவிட்டார். பின்னர் அவருக்கு வேண்டப்பட்ட காவல்துறை அதிகாரி மற்றும் மருத்துவர் ஒருவரும் இதே கருத்தை அவரிடம் சொன்னபோது தான் நான் சொன்னது சரி என்று என்னிடம் ஒத்து கொண்டார்.
  2. திரு.விஜயகாந்த் அவர்கள் புரட்சி தலைவர் திரு.எம்.ஜி.ஆர் அவர்களைப் போல ஏழைகளின் பசி உணர்ந்த தலைவர். நான் திரு.விஜயகாந்த் அவர்களை எப்போது பார்க்க போனாலும் சொக்கு சார் சாப்பிடீங்களா? என்று என்னை கேட்க மறந்ததில்லை. தன்னை பார்க்கவரும் எல்லோரிடத்திலும் இதே போன்று பரிவை காட்டுவார். மேலும் இடவசதி பிரச்சினையால் முன்பு போல் தினமும் குறைந்தது 1௦௦ பேருக்கு உணவு கொடுக்க முடியவில்லையே என்று உண்மையாக வருத்தப்பட்டு என்னிடம் நிறைய தடவை சொல்லி இருக்கின்றார்.
  3. திரு.விஜயகாந்த் அவர்கள் மிகப்பெரிய I.T., Tech Savvy. தன்னுடைய iPhone உதவி கொண்டு கட்சி நிர்வாகத்தை திறம்பட நிர்வாகம் நடத்த தெரிந்தவர். என்னுடைய பழக்கம் தமிழகத்தில் உள்ள முக்கிய கட்சிகளின் முதல் மட்ட மற்றும் இரண்டாம் கட்ட தலைவர்களுடன் இருந்து இருந்தாலும் இவர் அளவிற்கு I.T., அறிவு இன்னொரு தலைவருக்கு தமிழகத்தில் உண்டா? என்று என்னிடம் கேட்டால் அதற்கு என் பதில் இல்லை என்று தான் சொல்வேன். அந்த அளவிற்கு உலகத்தரமான தொழில்நுட்ப அறிவு உள்ளவர்.
  4. திரு.விஜயகாந்த் அவர்கள் வீடு, கட்சி அலுவலகம், வீடு என்று இருப்பாரே ஒழிய சாயங்காலம் 6 மணிக்கு பிறகு பார்ட்டி, Socializing என்று நேரத்தை விரயம் செய்யவே மாட்டார்.
  5. தன் மேலும், கடவுள் மேலும் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்.
  6. சொந்தமாக முடிவு எடுக்க கூடியவர். யாரும் இவரை முடிவு எடுக்க எந்த காலத்திலும் நிர்பந்திக்கவே(influence) முடியாது.
  7. ஏனைய தலைவர்களை போல் குறிப்பெடுத்து வைத்துக் கொண்டு பேச தெரியாதவர். மனதில் பட்டதை பேசக் கூடியவர். ஆழமாக யோசிக்க கூடியவர். யதார்த்தவாதி, வெள்ளந்தி, தைரியம் மிகுந்தவர்.
  8. தன் பிள்ளைகள் மேலும், மன்றத்தினர் மீதும் கொள்ளை பாசம் கொண்டவர்.
  9. தன்னை நம்பியவர்களை கடைசி வரை காப்பாற்ற கூடியவர்.
  10. தன் முதுகில் குத்தியவர்களை பற்றி அறவே பேச மறுப்பவர்.

இப்படி திரு.விஜயகாந்த் பற்றி அடுக்கி சொல்லலாம் நூறு நல்ல விஷயங்களை.

துரதிருஷ்டவசமாக அரசியல் சூழ்நிலைகளால் அவர் சட்டமன்றத்தில் எதிர்கட்சி தலைவராக பணியாற்ற முடியாததையும், வாய் தவறி அவரிடம் இருந்து வரும் வார்த்தைகளை பெரிதாக்கி அவர் குடித்து விட்டு உளறுவதாக கூறுபவர்களிடம் நான் சொல்லி கொள்ள விரும்புவது ஒரே ஒரு விஷயத்தை தான்:-

–    திரு.விஜயகாந்த் அவர்களை அரசியல் ரீதியாக எதிர்த்து அவரை வீழ்த்துங்கள். பிரச்சினையில்லை. செய்யாத தவறை அவர் செய்ததாக திரும்ப, திரும்ப சொல்லி அவரை அசிங்கப்படுத்தும் போது மக்கள் அதையையே பரிதாபப்பட்டு பார்க்கும் சூழ்நிலை வந்து விட்டால், அதன்பிறகு திரு.விஜயகாந்தை எதிர்க்கும் யாரும் அவரை எதிர்த்து அரசியல் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்பது சர்வ நிச்சயம்.

பின்குறிப்பு:-

  1. நான் தே.மு.தி.க உறுப்பினர் கிடையாது. இன்றுவரை என்னை அவர் கட்சியில் சேர சொன்னதும் கிடையாது.
  2. நான் தே.மு.தி.க ஆதரவாளனும் கிடையாது.
  3. திரு.விஜயகாந்த் பற்றிய இந்த உண்மையை சொல்வதால் எனக்கு எந்த ஆதாயமும் கிடையாது. இன்னும் குறிப்பாக சொல்லப் போனால் திரு.விஜயகாந்தை விட மிக நெருக்கமான பெரிய தலைவர்கள் தமிழகத்தில் இரண்டு பெரிய கட்சிகளிலும் எனக்கு இருக்கின்றார்கள்.
  4. என்னுடைய நண்பரான நடிகர் வாகை திரு.சந்திரசேகர், திரு.ராதாரவி, மறைந்த திரு.S.S.சந்திரன் ஆகியோரிடம் தனக்கு இருந்த / இருக்கும் நட்பை இன்னும் சிலாகித்து பாராட்டக் கூடிய இயல்பு கொண்டவர்.
  5. மாற்று இயக்கத்தில் இருந்தாலும் பிறரை பற்றி புறம் பேசியதில்லை – குறிப்பாக இன்றுவரை எனக்கு நன்கு பழக்கம் உள்ள பண்ருட்டி திரு.S.ராமசந்திரன் அவர்களை பற்றி எந்தவித அவதூறு வார்த்தைகளும் சொல்லாத கண்ணியமிக்கவர்.

 

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Share this:

10 comments

  1. THANKS FOR UR INFORMATION.

    Reply
  2. Thanks for your information.

    Reply
  3. Realy unbelievable,the medias are creating a false immage to captain,you have cleared the truth,you may advise captain to act like MGR,THEN ONLY HE CAN ACHIVE THINGS IN POLITICAL CARRIER

    Reply
  4. உங்களின் பதிவின் மூலம் நாம் அறிவது மனிதருள் மாணிக்கம் விஜயகாந்த் என்பது தான்

    Reply
  5. THANKS FOR UR INFORMATION

    Reply
  6. உங்களின் பதிவின் மூலம் நாம் அறிவது நல்ல மனிதன் விஜயகாந்த் என்பது தான். நல்ல கேப்டன் கூட

    Reply
  7. Thank U Sir UNMAI ORU NAL VELLUM

    Reply
  8. உண்மையை உலகிற்கு உரக்கச் சொன்னமைக்கு நன்றி! நன்றி!! நன்றி!!!

    Reply
  9. தமிழகத்தின் ஒளிவிளக்கு. . ஏழைகளின் தோழர் ஆஞ்சா நெஞ்சர் உழைப்பின் மகாவீரர் கடமையில் கண்ணியமிக்கவர் உண்மையிக்கு குரல் கொடுப்பவர் உரிமையில் கோபம் கொள்ளுபவர் நேர்மையின் வழியானவர் தைரியத்தின் சிகரம் மனிதநேய மிக்கவர் வள்ளலார் மனம் கொண்டவர் நட்பின் சிகரம் சரிப்பில் குழந்தை முகம் கணலாம்.. மற்றவர்களுக்கு ஏணியானவர்.. தமிழக மக்களின் நிரந்தர முதல்வர் எங்கள் கேப்டன். ..

    Reply

Write a Reply or Comment

2 × 2 =