குடி, குடிக்காதவனையும் கொல்லும் – 2
வழக்கம் போல
நிறைய அறிவுரை
குடியை பற்றி
நான் எழுதியதற்கு
நீங்கள் நன்றாக
வளர்ந்து வீட்டீர்கள்
ஏன் உங்களைப் பற்றிய
பழைய கதை இப்போது என்று….
பழையது புரியாததால்
தான் நம்மை
இன்னும் பழைய விஷயங்களே
ஆண்டு கொண்டு இருக்கின்றது
ஆண்டாண்டு காலமாக…
ஆஷ் சுட்டு கொல்லப்பட்டதற்கு
தேசபக்தர்களின்
தேசபக்தி என்று பெயர் வைத்து
கொண்டாடி கொண்டு இருக்கின்றோம்.
.
தொடர்ந்து இருந்துவிட்டு போகட்டும்
சிலரின் அறியாமை
அவர்களால் அறியப்படாமலேயே…
குடி
நன்றாக குடி
உங்கள் அற்ப
சந்தோஷத்திற்காக
நன்கு குடி
உன் மனைவியின்
மாங்கல்யம்
முதலில் விற்கப்படும்
அளவிற்கு குடி
பின்
உன் மனைவியின்
மாங்கல்யம்
அவள் கழுத்தை
விட்டு
நிரந்தரமாக
போகும்
அளவிற்கு குடி….
கவலை
நீங்க குடி
காதல் தோல்விக்கு குடி
காதல் வெற்றிக்கும் குடி
வெட்டியாக இருந்தாலும் குடி
வேடிக்கைக்காகவும் குடி
மணத்திற்கு முன் குடி
மணத்திற்கு பின் குடி
இறப்பிற்கு குடி
நிச்சயமாக இறக்கப்போகும்
பிறப்பிற்கு குடி
பணம் வந்தாலும் குடி
பணம் இழந்தாலும் குடி
உறவு வந்தாலும் குடி
உறவு பிரிந்தாலும் குடி
உன் முடிவு
உன் உரிமை
பாராட்டுக்கள்
ஆனால் நீ
எதற்காக குடித்திருந்தாலும்
எவ்வளவு குடித்திருந்தாலும்
குடித்த பின்
வாகனம் மட்டும் ஒட்டாதே
குடித்த நீ
இன்று இல்லாவிட்டாலும்
நாளை சாகத்தான் போகின்றாய்
உன் சாவு குறித்து
நான் வாழும் பூமியில்
யாருக்கும் சிறு அக்கறை
கூட கிடையாது….
ஆனால்
நீ குடித்துவிட்டு வாகனம் ஓட்டி
உன்னால்
வாழ்க்கையில்
குடி வாசனையே இல்லாதவன்
அனாதையாக சாலையில்
செத்த தெரு நாய் போல
செத்து போவது எந்த வகையில்
நியாயம்…
முகம் தெரியா ஏதோ
ஒரு மகாலக்ஷ்மியின்
குங்குமம்
உன்னால்
உன் திமிரால்
உன் அஜாக்கிரதையால்
உன் மமதையால்
அழிக்கப்படுகின்றது அந்த நொடியில்
என்பது உனக்கு தெரியுமா?????
நீ
குடித்த பின்
நீயாக இல்லாததால்
அனாதையாகி நிற்கும் குழந்தையை
நான் பார்த்த நாள் 10/8/2018
கை தூக்கி விட கூட
ஆள் இல்லாத
அந்த விதவைக்கு
ஆசை தீர இரண்டு பொட்டு
வைத்தான்
ஒரு கவிஞன்
அவன் எழுதிய கவிதையில்
கைம்பெண் என்று எழுதி
நிஜத்தில் ஒரு பொட்டு
கூட வைக்க விடாது இனி
– நீ வாழும் இந்த சமூகம்
என்பது சாக்கடையை
சந்தோஷம் என அள்ளி குடிக்கும்
என் தமிழ் சமுதாயமே
உனக்கு யார் புரிய வைப்பது????
குடித்து விட்டு
போதை தலைக்கேறி
வாகனம் ஒட்ட
ஆசை வந்தால்
இராமேஸ்வரம் சென்று
அங்குள்ள மீன் பிடி
கட்டுமரத்தையோ / கப்பலையோ
எடுத்து இலங்கை வரை ஓட்டு
நீ அடுத்த அப்பாவியை
சாவடிப்பதற்கு முன்
இலங்கை இராணுவத்தின்
துப்பாக்கி ரவை
உன்னை
முத்தமிடட்டும்
என் இன உறவின்
ஒரு உயிராவது அதனால்
காக்கப்படட்டும்
குடி, குடிக்காதவனை
கொல்லக்கூடாது
என்றால் சட்டம்
கடுமையாக்கப்பட வேண்டும்
கடுமையாக்கப்பட்டே ஆக வேண்டும்
எவனுக்கும்
எதற்கும்
எக்காலத்திலும்
அஞ்சாத
காவல்துறையால்
மட்டுமே
இது சாத்தியப்படும்….
சாத்தியப்பட வைப்போம்
மூன்றாவது கண் திறப்போம்
மதுவை புறக்கணிப்போம்
மதுவை புறக்கணிக்க வைப்போம்
குடிப்போரை
கூடி திருத்துவோம்
போதை இல்லா தமிழகத்தை நிர்மாணிப்போம்
Dr.ஆண்டாள் P சொக்கலிங்கம்
Share this: