August 13 2018 0Comment

குடி, குடிக்காதவனையும் கொல்லும்-1

குடி, குடிக்காதவனையும் கொல்லும்:
நாள் முழுவதும் நானும் குடியோடு இருந்திருக்கின்றேன்
தனிமையை ரசிக்க 
தவிக்கவிட்டதை நினைத்து நினைத்து மாய்ந்து போக 
நானும் குடியோடு இருந்திருக்கின்றேன்
அனுபவித்து குடித்திருக்கின்றேன்
நண்பர்களோடு குடித்ததை விட 
தனிமையில் குடித்த காலங்கள் அதிகம்
குடித்திருந்தால் யாரிடமும் பேச மாட்டேன் 
என்பதால் 
கிட்டத்தட்ட கவிஞர் கண்ணதாசன் போல 
நிறைய  யோசித்திருக்கின்றேன் 
யாசித்த போது ஏளனம் செய்தவர்களை 
பற்றி நிறைய சிந்தித்து இருக்கின்றேன் 
ஏன் இந்த நிலைமை 
எனக்கு மட்டும் என்கின்ற எண்ணம் 
என்னை சூழ்ந்த போதெல்லாம் 
வாழ்க்கை என்றாலே எப்போதும் சோதனை 
என்கின்ற யோசனையுடனே
நிறைய குடித்திருக்கின்றேன்
இருந்தாலும் 
எந்த காலகட்டத்திலும் 
சிந்தனை
தவறியதில்லை 
நோக்கம்
சிதறியதில்லை
அதனால் தான் 
என்னவோ
குடியால்
இழந்த 
நட்புகள்
சில என்றால்
குடியால்
பெற்ற  
நட்புகள்
பல உண்டு
கால ஓட்டத்தில்
சந்தித்தவர்கள்
நடத்தாமல் நடத்திய / நடத்தாமல் உணர்த்திய 
பாடங்களின் விளைவு
என் வாழ் நாள் முழுவதும் 
என் வாழ்க்கையில் என்னுடன் பிராயணப்படுவார்கள் என நான் நம்பிய சில உறவுகள்
என் முதுகில் குத்திவிட்டு 
என்னைவிட்டு சொல்லாமல்
ஓடியது போல
நான் நன்றியுடன் நட்பு பாராட்டி 
எப்போதும் ஆத்மார்த்தமாக 
என் வாழ்நாள் உள்ளவரை
என்னுடன்
இருக்கும்
என்று நம்பிய 
நன்றி கெட்ட
குடியும் 
ஒரு நாள் 
என்னை விட்டு விட்டு ஓடியது
குடி குடியை
கெடுக்கும் 
படித்திருக்கின்றேன்
– குடிக்கும்போது
இருந்தாலும் 
அது உண்மையா
என்பதை
உணர்ந்ததில்லை
– குடி என்னுடன் குடித்தனம் இருந்தவரை
உணர்ந்தேன் 
குடி குடியை
மட்டுமே
கெடுக்கும் 
என்பதை
உணர்ந்தேன்
உணர்ந்த நாள் 
10/8/2018
விவரம்
இன்று 
இரவு
கிடைக்கும்
Dr ஆண்டாள் P சொக்கலிங்கம்
Share this:

Write a Reply or Comment

4 × five =