April 09 2022 0Comment

கீரனூர் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத ஆதீஸ்வரசுவாமி திருக்கோயில்

திருப்பூர் மாவட்டம்,
காங்கேயம் வட்டம்,
கீரனூர் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத ஆதீஸ்வரசுவாமி திருக்கோயில் அருள்மிகு செல்வநாயகி அம்மன் திருக்கோயில் செல்வதற்கு இன்று ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்தது.

இந்த கோவில் கொங்கு மண்டலத்தின் ஒரு குறிப்பிட்ட மக்களுக்கான, குறிப்பிட்ட கூட்டத்திற்கான கோவில்…

நிறைய யோசித்து பார்த்துள்ளேன்
கொங்கு மண்டலம் மட்டும் எல்லாவற்றிலும் எப்படி தமிழ்நாட்டில்
சிறந்து விளங்குகின்றது என்று.

அதற்கு ஒரே காரணம் ஆக நான் கண்டுபிடித்த விஷயம்:

இன்றும் இந்துக்களாக உள்ள கொங்கு மண்டல மக்கள் அத்தனை பேரும் அவர்களுக்கான குலதெய்வ வழிபாட்டை முறையாக முன்னெடுத்து சென்று கொண்டிருக்கின்றார்கள்.

நல்ல விஷயத்தை யாரிடமிருந்து வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம்.

அந்த வகையில்
நீங்கள் நலமுடன் வாழ
வளமுடன் வாழ
செல்வ செழிப்புடன் வாழ பிரம்மாண்டமான வெற்றிகளை உள்ளடக்கிய வாழ்க்கையை வாழ ஆரோக்கியமாக வாழ
நிம்மதியாக வாழ
நிறைவாக வாழ
உங்கள் குலதெய்வ வழிபாட்டை முன்னெடுத்து செல்லுங்கள்

வருடம் ஒருமுறையாவது குடும்பத்துடன் குலதெய்வத்தை வணங்கி வாருங்கள்

நிச்சயம் நல்லது நடக்கும்
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்

என்றும் அன்புடன்

Dr ஆண்டாள் P சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

eighteen − eight =