June 20 2022 0Comment

கிருஷ்ணா…. #SriAandalVastu #DrAndalPChockalingam

கிருஷ்ணா….

இழந்தது எல்லாம் திரும்பத் தா
எனக் கேட்டேன் கிருஷ்ணனிடம்….

இழந்தது எவை என கிருஷ்ணன் கேட்டான்.

பலவும் இழந்திருக்கின்றேன்: கணக்கில்லை என்றாலும் பட்டியலிட்டேன்;

கால மாற்றத்தில்

இளமையை இழந்தேன்

அழகையும் இழந்தேன்

வயது ஆக ஆக
உடல் நலம் இழந்தேன்

எதை என்று சொல்வேன் நான்
கிருஷ்ணா நீ கேட்கையில்…..

எதையெல்லாம் இழந்தேனோ
அதையெல்லாம் மீண்டும் தா என்றேன்.

அழகாகச் சிரித்தான் கிருஷ்ணன்

கல்வி கற்றதால்
*அறியாமையை* இழந்தாய்

உழைப்பின் பயனாய்
*வறுமையை* இழந்தாய்

உறவுகள் கிடைத்ததால் *தனிமையை* இழந்தாய்

நல்ல பண்புகளால்
*எதிரிகளை* இழந்தாய்

சொல்ல இன்னும்
பல உண்டு இதுபோல!!!!!!

தரட்டுமா அனைத்தையும்
திரும்ப என்றான்

திகைத்தேன்

இழப்பின் மறு பக்கம்
எதுவென்று உணர்ந்தேன்!!!!

வாழ்க்கையின் ஓட்டத்தில்
இழப்பும் பேறு தான்!!!!!

இழந்ததை அறிந்தேன்
இதயம் தெளிந்தேன்

என் ஆணவத்தை
அடித்து நொறுக்கி விட்டு
என் மனதை தெளிவாகி விட்டு
கிருஷ்ணன்
கிருஷ்ணனாகி போனான்.

பெய்கின்ற ஒட்டுமொத்த
மழையும் கூட தேனாகலாம்
இருக்கின்ற அத்தனை
மணலும் கூட பொன் ஆகலாம்
ஆனால் அவையாவும்
நீயாகுமா கிருஷ்ணா….

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்……

என்றும் அன்புடன்

டாக்டர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

 

Share this:

Write a Reply or Comment

nineteen + 16 =