May 07 2018 0Comment

கிரிக்கெட்

 

எனக்கு 
இப்போதும்
எப்போதும்
மிகவும் 
பிடித்த
விளையாட்டு
கிரிக்கெட் 
ஏனோ
அரசியல்
புரிந்த  பிறகு
பணம்
புரிந்த பிறகு
அதனுள்ளே
ஒளிந்துள்ள
இன்னொரு
விளையாட்டு
தெரிந்த பிறகு
சின்ன 
சின்ன பிள்ளைகள்
மட்டுமே
விளையாடும்
கிரிக்கெட்
மட்டுமே
பிடித்திருக்கின்றது
எனக்கு
ஏனோ
நான் 
சிறந்த 
கிரிக்கெட்
வீரனாக 
வராததில்
எந்த வருத்தமும் இல்லை
விளையாட்டை கூட
விளையாட்டாக
விளையாடக்கூடாது
என்பதில்
தெளிவு 
உள்ளதால்
எனக்கு…….
1995 ல்
ஆந்திராவில்
இருந்தபோது
 
விளையாட்டில்
விஷம்
கலக்காத போது 
விளையாட்டை
விஷம் 
கலக்காதவர்களுடன்
கடைசியாக 
விளையாடிய போது…………………

என்றும் அன்புடன்

ஆண்டாள் P சொக்கலிங்கம்

 
 

 

Share this:

Write a Reply or Comment

18 − 13 =