காவல்துறைக்கு மனமார்ந்த நன்றி:
தமிழக காவல்துறையில் காவலர்கள்,பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் வண்ணம் Community Policy
@ சமுதாய பணி செயல் முறையில் இருந்து வருகிறது.
இதன்படி எனது சொந்த கிராமமான கோவில்குளம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் நகராட்சியின் கீழ் வருகின்றது. அந்த வகையில் என் கோவில்குளம் ஊர் பொதுமக்கள், ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை மற்றும் நம் நாடு நமது இல்லம் சமூக அமைப்புகளின் வேண்டுகோளுக்கு இணங்க எங்கள் ஊரில் 06/02/2021 த.சி. கா 12 ஆம் அணி தளவாய் திரு. த. கார்த்திகேயன் அவர்கள் முன்னிலையில் சமுதாயப் பணிகள் சிறப்பாக நடைபெற்றது.
எங்கள் ஊரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி, துணை சுகாதார நிலையம், அரசு நியாயவிலை கடை மற்றும் தென்னழகர் பெருமாள் கோவில் ஆகிய இடங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை த.சி. கா 12 ஆம் அணி காவல் அதிகாரிகள், காவலர்கள் உட்பட 89 நபர்கள், அம்பை நகராட்சி ஆணையாளர் செல்வி.பார்கவி அவர்களின் உத்தரவு படி , அம்பை நகராட்சி சுகாதார ஆய்வாளர் திரு. பொன் வேல்ராஜ், அம்பை நகராட்சி ஊழியர்கள் , வி. கே.புரம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் திரு.கணேசன், திரு.ஆறுமுகம் தலைமை ஆசிரியர் ஓய்வு , திரு.S.மதிவானன் காவல்துறை ஓய்வு ,திரு.கணேசன் வேளாண்துறை ஓய்வு, திரு.குமார் மணிகண்டன் நம் நாடு நமது இல்லம் (நிறுவனர்), திரு.கூடலரசன் நம் நாடு நமது இல்லம் (ஆலோசகர்) , குழுவினர் மற்றும் பொதுமக்கள் துணையுடன் சுத்தப்படுத்தியும் , Plastic இல்லா ஊராக மாற்றிடவும்
சிறப்பான முறையில் பணிபுரிந்தனர்.
மேற்படி பணியை சிறப்பாக முன்னின்று நடத்திய த.சி.கா தளவாய் திரு. த.கார்த்திகேயன்
அவர்களுக்கு ஊர் பொதுமக்கள் தங்கள் நன்றியினை தெரிவித்து கொண்டனர்.
இச்செயல் காவலர்கள் மற்றும் பொதுமக்கள் இடையை நல்லுணர்வை மேம்படுத்தும் செயலுக்கு ஒரு மைல்கல்லாக அமையும் என்பது உண்மை.
தமிழ்நாடு காவல் துறைக்கு மனமார்ந்த நன்றி….
என் கிராமத்தை
மாதிரி கிராமமாகவும்,
இந்தியாவிலே முதன்மை கிராமமாகவும்
மாற்றி காட்டுவேன் ஆண்டாள் துணையுடன்…..
அனைத்து வகையிலும் எங்கள் கிராமத்தை மாற்றுவதற்கு உறுதுணையாக இருக்கும் முன்னாள் காவல்துறை துணை ஆய்வாளர் (ஓய்வு) திரு. கூடல் அரசன் அவர்களுக்கு மனமார்ந்த சிறப்பு நன்றி…
என்றும் அன்புடன்
டாக்டர் ஆண்டாள் P சொக்கலிங்கம்








Share this: