கால்பந்து கதை!!!!

கால்பந்து கதை:

ஒருமுறை கால்பந்து, இறைவனிடம் போய் முறையிட்டதாம். “நானும், புல்லாங்குழலும் காற்றை மையமாக வைத்துத்தான் இயங்குகிறோம். புல்லாங்குழலை எல்லாரும் உதட்டோடு வைத்து கொஞ்சுகிறார்கள்.

ஆனால், என்னை மட்டும் எல்லாரும் எட்டி, எட்டி உதைக்கிறார்கள். இறைவா உனது படைப்பில் ஏன் இந்த பாகுபாடு…?” என்று கால்பந்து ஆதங்கத்தோடு கேட்டதாம்.

உடனே இறைவன் சொன்னாராம் “நீ சொல்வது உண்மைதான். புல்லாங்குழலும், நீயும் காற்றின் அடிப்படையில்தான் இயங்குகிறீர்கள். புல்லாங்குழல், தான் உள்வாங்கும் காற்றை அழகிய இசையாக உடனே பிறருக்கு கொடுத்து விடுகிறது.

ஆனால், நீயோ, உள்வாங்கும் காற்றை யாருக்கும் கொடுக்காமல் உனக்குள்ளே வைத்துக் கொள்கிறாய். அதனால்தான் உன்னை எல்லாரும் எட்டி எட்டி உதைக்கிறார்கள்…” என்று
கூறினதாக அந்த கதை முடியும்.

பிறருக்காக வாழ வேண்டும் என்கின்ற எண்ணம் இந்த கால்பந்தை பார்த்தாவது வரட்டும்
அந்த எண்ணம் இல்லாதவர்களுக்கு………

இதுவும் எதுவும் கடந்து போகும் ஆனால் எதுவும் மறந்து போகாது.

என்றென்றும் அன்புடன்
டாக்டர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

16 + eight =