காலமும், பாவமும்

ஸ்ரீ

நேரம் தவறாமைசென்னை மிகவும் முன்னேறி இருக்கின்றது என்பதை நான் இரண்டு விஷயங்களில் பார்க்கின்றேன்.

  1. நிறைய முடி திருத்தகம் சென்னைக்கு வந்திருக்கின்றது.
  1. தடுக்கி விழுந்தால் கூட Mobile Top-up கடையில் தான் விழ வேண்டும் என்கின்ற அளவிற்கு Mobile Top-up கடைகளின் எண்ணிக்கை அளவு உள்ளது

சென்னை மக்களுக்குக்காக விஞ்ஞானம் அளவுக்கதிகமாக தேவையற்ற விஷயங்களில் வளர்ந்திருந்தாலும் அதை விட ஒரு குறிப்பிட்ட விஷயம் மிகவும் கவலைக்கிடமான முறையில் சென்னை மக்களிடம் வளர்ந்து உள்ளது என்றால் அது ஒத்துக் கொண்ட வேலையை சொன்ன நேரத்திற்குள் செய்யாமல் இருப்பது மற்றும் அடுத்தவர்களை காக்க வைத்து அடுத்தவர்களின் நேரத்தை வீண் செய்வது தான்.

என்னைப் பொறுத்தவரை இந்த விஷயத்தை மிகப் பெரிய பாவ செயலாக நான் கருதுகின்றேன். அடுத்தவர் நேரத்தை வீணடிப்பதை விட இவ் உலகில் ஒரு “அயோக்கிய செயல்” வேறு எதுவும் கிடையாது என்பது என் கருத்து.

“குறித்த நேரம்” குறித்து தெளிவில்லாமல் இருக்கும் இன்றைய சமுதாய சூழ்நிலையில் நேரம் மிக முக்கியம் என்று நேரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து முன்னேறிய ஒரு பெரிய தொழிலதிபரின் வாஸ்துபடி அமைக்கப்பட்ட தொழிற்சாலையை வாஸ்து பயிற்சி வகுப்பு I – க்கு வருபவர்களுடன் சேர்ந்து பார்க்க உள்ளேன்.

“நேரம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர், அவர் அனுபவத்தில் உணர்ந்து எனக்கு சொன்னதை வெகுவிரைவில் உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்.

 

திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;

தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

 

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

3 × one =