September 15 2018 0Comment

கலக்கல் கணேசன்:

கலக்கல் கணேசன்:

1985-1986 களில்

கடவுளை வணங்குபவன் முட்டாள்

கடவுள் இல்லை 

கடவுள் இல்லவே இல்லை

கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்

கடவுளைப் பரப்புபவன் அயோக்கியன்

கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி

786 என்ன அல்லாவின் டெலிபோன் நம்பரா

பரிசுத்த ஆவியில் இட்லி வேகுமா

என்று நிறைய சுவர்களில் 

அப்போது நான் வசித்த அடையாறு 

பகுதியில் எழுதியவனும் நானே…

400 க்கும் மேற்பட்ட 

பிள்ளையார் சிலைகளை

உடைத்தவனும் நானே…..

சரியாக அதில் இருந்து 10

வருடங்கள் கழித்து

1995-1996 களில்

உச்சகட்ட பிரச்சினைகளுக்கு

நடுவே தந்தை 

பேச்சுக்கு செவிமடுத்து  

சென்ற இடம் திருச்செந்தூர் 

நின்ற இடம் ஸ்ரீவில்லிபுத்தூர் 

அமர்ந்த இடம் பிள்ளையார்பட்டி 

அமர்ந்த இடத்தில 

எனக்கு கற்று 

கொடுக்கப்பட்டு 

நான் கற்று 

கொண்ட

முதல் மந்திரம்

அற்புதக் கீர்த்தி வேண்டின்

ஆனந்த வாழ்க்கை வேண்டின்

நற்பொருள் குவிதல் வேண்டின்

நலமெலாம் பெருக வேண்டின்

கற்பக மூர்த்தி தெய்வக்

களஞ்சிய திருக்கை சென்று

பொற்பதம் பணிந்து பாரீர்

பொய் இல்லை நான் கண்ட உண்மை!

சரியாக அதில் இருந்து 10

வருடங்கள் கழித்து

2005-2006 களில்

எனக்கு

இரண்டு வீடுகள் / இரண்டு  கார்கள் 

சொந்தமாகின்றன

சரியாக அதில் இருந்து 10

வருடங்கள் கழித்து

2015-2016 களில்

ஆண்டாள் தங்க

விமான பணி

நிறைவு பெறுகின்றது

வாழ்க்கையை சற்று

திரும்பி பார்த்தால்

நூறு முக்கிய

நண்பர்கள் எனக்காக 

உருவாகிறார்கள் 

அதில்

பாதி 

பிராமணர்கள்

எனக்கு ஆண்டாள் 

என பெயர் சூட்டியது 

மிக நெருக்கமான

என் முஸ்லிம்

உடன்பிறப்பு

என்னின் இந்த

உயர்ந்த வாழ்க்கைக்கு

அடிப்படையே

ஒரு தூய கிறிஸ்துவ

நண்பனால் ஏற்பட்டது

புள்ளிகள்

எப்படி கோலமாக 

மாறியது என்பதற்கு

நானே உதாரணமாகி போனேன்

உன்னை உடைத்தவனுக்கு 

உன்னில் இருந்தே ஆரம்பம் 

இல்லை என்றவனை

இல்லாமல் ஆக்கியவன்

ஆடி அடங்கும் 

வாழ்க்கையினில் தான் 

எத்தனை அட்டகாசம்

செய்திருக்கின்றாய்…..

உன்னுள்ளயே 

இப்போது என்

உயிர் அடக்கம்

என்பதாலேயே

இன்றிலிருந்து  

சரியாக 

18 வருடங்கள் முன்

எனக்கு பிறந்த 

பெண் பிள்ளைக்கு 

கற்பகம் என 

உன் பெயரையே  

வைத்து இருக்கின்றேன்

கணேசா……

இன்று உன்னாலே

இந்த 30 வருடங்களில்

எனக்கு கிடைத்ததை விட

என்னை நம்பியவர்களுக்கு 

கிடைத்தது அதிகம்

அந்த வகையிலும் 

மெத்த சந்தோசமே…..

கெட்டவன்

கேட்டதால்

கேட்டவன் 

கெடாமல் போனான்

விளைவு

20 லட்சம் பேர் 

குறைந்தது

ஆண்டாளையும் 

காமாட்சியையும்

தரிசனம் செய்திருப்பார்கள்

இது தான் 

செந்தில் – கணேசனின்

விளையாட்டு

2025-2026 !!!!!??????

ஆச்சரியகுறியாக 

இருக்கும் 

என்றாலும் இப்போது

அவனை நோக்கி

நிறைய கேள்விகள்

பாக்கி இருக்கின்றது

1.

இல்லை .. 

உன்னை இல்லை என்பவனை 

அதிகம் ஆட விடுகின்றாய்???

2.

உண்டு

நீ உண்டு என்பவனை 

என்பவனை அதைவிட 

அதிகம் ஓட விடுகின்றாய்???

3.

நல்லவன் சீக்கிரம் நிறைய வீழ்கின்றான்????

4.

கெட்டவன் அதிகம் ஜெயிக்கின்றான்????

5.

உன்னை திட்டியவனே பரவாயில்லை

என்கின்ற அளவிற்கு 

உன்னை ஆதரிக்கிறவர்களின் 

ஆட்டம் 

சுய தம்பட்டம்

தாங்க முடியாமல் 

போகின்றதே?????

இங்கிருந்து

விடைபெறும் முன்

விடை கிடைக்கும்/கிடைத்துவிடும்

என நம்புகின்றேன்

வழி நடத்துகின்ற

என் குரு செந்திலுக்கும்

அவன் அண்ணன் கணேசனுக்கும்

இவர்களின் அத்தை கோதைக்கும்

மற்றும் மாமா கோவிந்தனுக்கும் 

நன்றிகள் பல

இன்று பிறந்தநாள் காணும் 

கலக்கல் கணேசனுக்கு 

என் இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்

நன்றி மறவேன்

என்றும் மறவேன்

வெகு விரைவில் 

உன்னை அடுத்த கட்டத்தில் சந்திப்பேன்

என்றும் அன்புடன்

Dr.ஆண்டாள் P சொக்கலிங்கம்

 

 

 

Share this:

Write a Reply or Comment

10 − six =