வாஸ்து – விடை தெரியா மர்மங்கள் – II

ஸ்ரீ

Vastu - Karmaஎன்னுடைய நல்ல நண்பர் மூலம் அறிமுகமாகின்றார் மிக பெரிய அதிகாரம் பொருந்திய நபர்.. அவருக்கு நிறைய பிரச்சினைகள். என்னை அந்த பெரிய அதிகாரம் பொருந்திய நபருக்கு வாஸ்து பார்ப்பதற்காக அழைத்து போனார் என் நண்பர். பொதுவாக வாஸ்துவில் நம்பிக்கை இல்லாத அவருக்கு என்னைப் பார்த்தபின் ரொம்ப பிடித்து விட்டது. தயக்கத்துடன் என்னை வரவழைத்து வாஸ்து பார்த்தவர் நானே எதிர்பார்க்காத விதமாக, நான் சரி செய்ய சொன்ன அத்தனை விஷயங்களையும்  செய்து முடித்து விட்டார் – ஒன்றே ஒன்றை தவிர்த்து. அதாவது அவ்வீட்டின் பிரம்மஸ்தானம் Double Height கொண்டது. அதைமட்டும் ஏனோ நான் சொன்னபடி சரி செய்யவில்லை. மற்றபடி மனைக்கு வடக்கு மற்றும் கிழக்கு திசைகளில் சாலை உள்ள மிக அற்புதமான மனை அது. ஒரு நாள் என்னை அழைத்த மிக பெரிய அதிகாரம் பொருந்திய அந்த நபர் என்னிடம் “சொக்கு, See எனக்கு November – க்குள் நான் எதிர்பார்க்கும் நல்லது நடந்தால் அது வாஸ்துவினால் தான் என்று சொல்லுவேன். November – க்கு பிறகு என்றால் எனக்கு ஜோதிடப்படி நேரம் அருமையாக உள்ளது அதனால் ஜோதிடப்படி நல்லது நடந்தது என்று சொல்லி விடுவேன். Ok – va” என்று கேட்டார். நானும் சரியென்று ஒத்து கொண்டு வந்துவிட்டேன். சொல்லி 3  வருடம் கடந்தாகிவிட்டது. அவர் நிலைமை அன்று எப்படி இருந்தோ அப்படியே தான் இன்றும் இருக்கின்றது. நான் சொன்ன மிக பெரிய அதிகாரம் பொருந்திய அந்த நபர் இன்றும் என்னுடன் நல்ல நட்புடன் இருக்கின்றார். அதேபோல் அவருக்கு பரிகாரம் சொன்ன 3 ஜோதிடர்களிடமும் நட்புடன் தான் இருக்கின்றார். இவருக்கு ஏன் வாஸ்துவோ, அதிலும் குறிப்பாக வாஸ்துவில் மிகச்சிறந்த வடக்கு மற்றும் கிழக்கு திசையில் சாலை உள்ள இந்த மனையோ, மிகச்சிறந்த ஜோதிடர்களின் ஜோதிடமோ கை கொடுக்கவில்லை என்பதற்கு காரணம் இன்றுவரை அவருக்கும் அவர் நம்பிய ஜோதிடர்களுக்கும் தெரியாது. ஆனால் என்னால் அதற்கான காரணத்தை  யூகிக்க முடிகிறது – சொன்னால் ஏற்க மாட்டார்கள் மக்கள் என்பதால் அதை சொல்லாமலேயே விட்டு விடுகின்றேன்.

வடக்கு மற்றும் கிழக்கு திசையில் சாலை உள்ள மனையில் 70% வாஸ்துபடி அமைக்கப்பட்ட நல்ல வீடு எதிர்பார்த்த பலனை தரவில்லை என்பது உங்களை பொறுத்தவரை வாஸ்துவில் விடை தெரியாத கேள்வியாகவே இருந்துவிட்டு போகட்டும். இருந்தாலும் இது போன்று உங்களுக்கும் நிகழாமல் இருக்க கீழ்க்கண்ட கதை ஓரளவுக்கு உதவும் என நம்புகின்றேன்.

ஒரு பேக்கிரியை நடத்தி வந்த ஒருவர் தன்னுடைய பேக்கிரியின் தேவைக்காக எப்போதும் 1 கிலோ வெண்ணையை குறிப்பிட்ட நபரிடமிருந்து வாங்குவார். அப்படி வாங்கிய வெண்ணையின் அளவு 1 கிலோவை விட ஒவ்வொரு முறையும் குறைவாக இருப்பதை கண்டுபிடித்தார். கண்டுபிடித்த பின் பயங்கர கோபம் கொண்டு அங்கிருந்த நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

நீதிபதியும் வெண்ணைய் வியாபாரியிடம் நீங்கள் வெண்ணையை விற்கும் போது எடை போட்டு தானே விற்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு வெண்ணைய் விற்பவரும் ஆம் என்று பதில் சொன்னார். அப்படியென்றால் எப்படி 1 கிலோ என்று சொல்லி எடை குறைவான வெண்ணையை விற்றீர்கள் என்று நீதிபதி வினவியவுடன் வெண்ணைய் வியாபாரி கீழ்க்கண்டவாறு சொன்னார்.

ஐயா – என்னுடைய தராசில் எடை பார்க்க எடை கற்கள் கிடையாது அதனால் பேக்கிரியிலிருந்து ஒரு கிலோ எடை உள்ள ரொட்டி பொட்டலத்தை வாங்கி தராசில் வைத்து வெண்ணையின் அளவை கணக்கிடுவேன். அந்த வகையில் 1 கிலோ ரொட்டி என்று கூறி எடை குறைவான ரொட்டியை விற்ற பேக்கிரி உரிமையாளர் தான் தவறு செய்தவர்.

நீ என்ன கொடுக்கிறாயோ அதுவே உனக்கு கிடைக்கும் என்கிற நீதியை உணர்ந்த பேக்கரி உரிமையாளர் வெட்கி தலை குனிந்தார்.

கர்மா: – அதன் கடமையை செய்தது!!!….

கர்மா: – அதன் கடமையை மட்டுமே செய்யும்…

திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;

தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

 

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Share this:

1 comment

  1. “ஜனனீ ஜென்ம செளக்யானாம் வர்தனீ குலசம்பதாம் பதவீ பூர்வ புண்யானாம் லிக்யதே ஜென்ம பத்ரிகா” என்னும் பெரியோர் வாக்கினை பேக்கரி கதை மூலம் புரிய வைத்தமைக்கு மிக்க நன்றி. ஆண்டாள் திருவடிகளே சரணம்.

    Reply

Write a Reply or Comment

seventeen − 14 =