May 30 2018 0Comment

கருவறை to இருட்டறை

                                                                             கருவறை to இருட்டறை

முதியோர் 

இல்லத்தில் 

இருக்கும்

ஒரு அம்மாவின் 

பதிவு:

நீ இருக்க 

ஒரு 

கருவறை 

இருந்தது 

என் 

வயிற்றில்

ஆனால்

நான் 

இருக்க ஒரு 

இருட்டறை 

கூடவா 

இல்லை 

உன் 

வீட்டில்

எந்த 

நேரத்தில் 

நீ

சாப்பிட

வேண்டும் 

என்ன 

சாப்பிட

வேண்டும்

என்பதை

தீர்மானித்தது 

உன் 

அம்மாவாக 

இருந்த வரை

உன் 

உடம்பு 

நன்றாக

இருந்தது

என்பதை 

மறந்தாயோ

போனது 

போகட்டும்

நிறைவாக

ஒன்று

நீ

நெல்லாக 

இல்லை 

என்றால் 

கூட 

பரவாயில்லை 

அதில் 

உள்ள 

புல்லாக 

மட்டும் 

இருந்து 

விடாதே 

என் 

செல்ல மகனே  

உன்னை 

களை 

என 

எடுத்து 

விடுவார்கள் 

கவனம்

வேணும்

என்

கண்ணே

என்னை

நான்

பார்த்து

கொள்ள

சில

வழி

உண்டு

உன்னை

பார்த்து 

கொள்ள

என்னை 

விட

வேறு

எவர் உண்டு

கவனம்

வேணும்

என்

முத்தே

இதுவும்

கடந்து

போகட்டும்

சிறு

இரவலுடன்

கட்டயா கவி

ஆண்டாள் p சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

3 × two =