கடிதம் – 7

கடிதம்  7

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

 வாழ்க வளமுடன்

அனைவருக்கும் வணக்கம்…

மலர்களிலேயே

கருநெய்தல் மலர் ரொம்ப விசேஷம்

பத்மம் அதனைவிட சிறப்பு

தாமரை (100 இதழ்கள்) பத்மத்தை விட சிறப்பானது

புண்டரீகம் (1000 இதழ்கள்)  தாமரையை விட சிறந்தது

ஸ்வர்ண புஷ்பம் (தங்கத்தால் ஆனது) புண்டரீகத்தை விட சிறந்தது

ஆனால்

ஆண்டாள் – ஆண்டாள் என்கின்ற துளசி எல்லாவற்றையும் விட சிறப்பானது ; மேலோங்கியது……

இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆண்டாளை  நான் இதுவரை கடிதங்களில் சொன்ன  அந்த பெண்மணி 200%  நம்பியதன் பயனாக அவருக்கு கிடைத்த விஷயங்கள் கீழ்கண்டவாறு:-

  1. மகிழ்ச்சி
  2. வளர்ச்சி
  3. சந்தோஷம்
  4. ஆனந்தம்
  5. இன்பம்
  6. சுகம்
  7. செழுமை
  8. வளமை
  9. இனிமை
  10. நன்மை

உயிரோடு இருப்பதல்ல வாழ்க்கை…..

உயிர்ப்போடு இருப்பது தான் வாழ்க்கை….

  • என்று புரிய வைத்தவள் ஆண்டாள்
  • என்று புரிய வைத்து கொண்டிருப்பவள் ஆண்டாள்
  • என்று வாழ்ந்து காட்டியவள் ஆண்டாள்
  • என்று உணர்ந்து வாழ்ந்தவள் ஆண்டாள்
  • என்று வாழ்ந்து உணர்த்தி காட்டியவள் ஆண்டாள்

–    இதை 200% நான் கடிதத்தில் சொன்ன அந்த பெண்மணி புரிந்து கொண்டு நடந்தார்

  • ஆண்டாள் பூமிக்கு வந்ததும் அதிசயம்
  • ஆண்டாள் பூமியில் வாழ்ந்த வாழ்க்கையும் ஓர் அதிசயம்
  • பெருமாளை சென்று அடைந்ததும் ஓர் அதிசயம்
  • அதிசயம் நடக்கும் என நம்பியவள் ஆண்டாள்
  • அதிசயத்தை நடத்தி காட்டியவள் ஆண்டாள்
  • அதிசயத்தை நடத்தி காட்டுபவள் ஆண்டாள்

–    இதை 200% நான் கடிதத்தில் சொன்ன அந்த பெண்மணி புரிந்து கொண்டு நடந்தார்

  • தமிழர்களின் அடையாளம் ஆண்டாள்
  • தமிழர்களில் தனித்துவம் மிக்கவள் ஆண்டாள்

–  அதே போல் ஆண்டாள் பக்திக்கு சிறந்த நல் உதாரணமாக யாரையாவது கூற வேண்டும் என்று கேட்டால் நான் இந்த பெண்மணியை தான் சொல்லுவேன்…

  • இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த பெண்மணி ஆண்டாள் தங்க விமான திருப்பணிக்கு பணம் கொடுத்தார் என்பதற்காக நான் அவரை தூக்கி பாராட்ட இக்கடிதம் எழுதவில்லை
  • ஆண்டாள் தங்க விமான திருப்பணிக்கு தங்கம் கொடுத்ததால் அவரை பாராட்ட இக்கடிதம் எழுதவில்லை
  • ஆண்டாளுக்கு உரிய பணி முடிவுற இல்லை என்று என்னுடன் சேர்ந்து அவரும் கவலைப்பட்டார் என்பதற்காக சந்தோஷப்பட்டு அவரை கௌரவ படுத்த இக்கடிதம் எழுதவில்லை
  • தன்னலமற்ற பக்தியையும், பிரதிபலன் எதிர்பாரா அன்பையும் ஆண்டாள் மேல் இவர் வைத்துள்ளார் என்பற்காக ஆனந்தப்பட்டு, இக்கடிதம் எழுதவில்லை….

இந்த எல்லா நல்ல காரணங்களையும் மீறி நான் இவரைப் பற்றி சிலாகித்து கடிதம் எழுதி சந்தோஷப்படுவதற்கு காரணம் 2 விஷயங்கள் மட்டும் தான்:-

  1. இந்தப் பெண்மணி யாரும் சொல்லாத, ஆனால் எல்லோருக்கும் தெரிந்த வாழ்க்கை தத்துவத்தை எனக்கு மிக லகுவாக எளிமைப்படுத்தி கூறிவிட்டார்…
  • கொடுத்தால் தான் கிடைக்கும்
  • கொடுக்க கூட வேண்டாம் நினைத்தாலே கிடைக்கும்
  • நினைக்க கூட வேண்டாம் கிடைக்கும்னா கிடைக்கும்;
  • நடக்கும்னா நடக்கும்
  1. எனக்கு இதுவரை நான் பார்த்திராத ஆண்டாளை வேறு தளத்தில் இருந்து, வேறு கோணத்தில் புரிய வைத்து, பார்க்கவும் வைத்து விட்டார் – இந்த நிகழ்கால ஆண்டாள்..

இதைப்பற்றி கண்டிப்பாக ஆகஸ்டு 24 – ல் நடைபெறும் சேலம் கூட்டத்தில் விரிவாக விவரிக்கின்றேன்.

என்னுடைய ஆகஸ்டு 24 – ம் நிகழ்ச்சியை நான் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறேன்…   காரணம் உங்களுடன் சேர்ந்து நானும் அந்த பெண்மணியை தரிசனம் செய்ய….

நான் இதுவரை சொன்ன பெண்மணியின் பெயர்

திருமதி.சூர்யகலா

வாழ்க திருமதி.சூர்யகலாவும் அவர் உறவுகளும்…

நான் கஷ்டப்பட்ட நேரங்களில் எல்லாம் மரணத்தை தொட்டுவிட நிறைய சிந்தித்தது உண்டு….   இப்போது கூட யார் என்னை கேட்டாலும் வாழ்கின்ற ஒவ்வொரு நாளும் போனஸ்….   மரணம் இந்த நொடி வந்தாலும் அதை எதிர் கொள்ள தயாராக இருக்கின்றேன் என்று….   ஆனால் உண்மையில் முதன்முறையாக இக்கடிதம் வாயிலாக, உண்மையாக, மனதார ஆண்டாளிடம் வேண்டிக்கொள்வது இன்னும் இது போன்ற நிறைய பேர்களை தரிசிக்க ஆசைப்படுகின்றேன்….   என்னை இன்னும் சிறிது காலம் நான் ஆசைப்படும் வரை வாழவிடு…..

 

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

sixteen + nineteen =