கடிதம் – 5

கடிதம் – 5

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்

அனைவருக்கும் வணக்கம்…

இதுவரை என்னால் எத்தைனையோ பேர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தங்க விமான திருப்பணிக்கு தங்கமும், பணமும் கொடுத்திருக்கிறார்கள்….

தன்னலம் பார்க்காமல் இதுவரை தங்க விமான திருப்பணிக்கு தங்கமும், பணமும் கொடுத்து உதவிய ஆயிரக்கணக்கானோர்களை மூன்று பிரிவாக பிரிக்கலாம்.

முதல்பிரிவினர்:

முதல்பிரிவினர் 70% பேர் என்று வைத்து கொண்டால், அந்த 70% பேர்களும் ஒன்று தன்னிடம் மிகையாக இருந்த தங்கத்தை கொடுத்து இருப்பார்கள்….

அல்லது

தங்கம், பணம் கொடுத்தால் நல்லது நடக்காதா என்று நினைத்து கொடுத்து இருப்பார்கள்….

அல்லது

நல்ல புண்ணிய காரியத்திற்கு கொடுத்தால் நல்லது என்று எண்ணி கொடுத்திருப்பார்கள்….

அல்லது

எனக்கு இந்த கோரிக்கை முடிந்தால் நான் உனக்கு தங்கம் தருகிறேன் என்று வேண்டி, அப்படிப்பட்ட கோரிக்கை நிறைவேறிய பின் தங்கம் கொடுத்திருப்பார்கள்…

இரண்டாம் பிரிவினர்:

இரண்டாம் பிரிவினர் 20% பேர் என்று வைத்து கொண்டால், அந்த 20% பேர்களும் நான் சொன்னேன் என்பதற்காக மட்டும் கொடுத்திருப்பார்கள்….

மூன்றாம் பிரிவினர்:

மூன்றாம் பிரிவினர் 10% பேர் என்று வைத்து கொண்டால், அந்த 10% பேர்களும் எதையும் எதிர்பாராமல் ஆண்டளுக்காக மட்டுமே கொடுத்திருப்பார்கள்…

மூன்றாம் பிரிவில் உள்ளவர்களில் ஆண்டாளுக்கு தங்கம் கொடுத்தவர்களின் பின்புலத்தை பார்த்தோமேயானால் அதில்

  • சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தவறானவளாக ஆக்கப்பட்டு, பின்னால் தன்னை நம்பியவர்களின் வயிறு நிறைய வேண்டும் என்பதற்காக தன்னையே இழந்த ஒரு உத்தமத்தாயின் தங்க பங்களிப்பும் இத்திருப்பணியில் உண்டு….
  • தான் இறக்கப் போகிறோம் என்று தெரிந்த உடன் தன் கடைசி பேச்சாக ஆண்டாள் பி.சொக்கலிங்கத்திடம் ஆண்டாளுக்குரிய பணத்தை கொடுத்துவிடு என்று சொல்லிவிட்டு இழந்த தெய்வத்தாயும் உண்டு…
  • 100 மில்லி கிராம் – தான் அந்த வீட்டினில் இருந்த கடைசி பொட்டு தங்கம் என்கின்ற நிலையில் அந்த தங்கம் கூட தனக்குரியதல்ல என்று முடிவெடுத்து அது ஆண்டாளுக்குரியது என்று கழற்றி கொடுத்த அன்பு தாயும் உண்டு…
  • தனக்கென்று இருந்த இரண்டு ஆண் குழந்தைகளையும் விபத்தில் பரி கொடுத்தபின் தன்னுடைய இரண்டு குழந்தைகளுக்கு உரிய அத்தனை நகைகளையும் கண்பார்வை குன்றிய கணவருடன் வந்திருந்து நான் தங்கிருந்த ஹோட்டலில் எனக்காக காத்திருந்து கொடுத்து சென்ற புண்ணிய தாயும் உண்டு….

இதுபோல் நூற்றுக்கணக்கான அற்புதமானவர்கள் இந்த மூன்றாம் பிரிவின் கீழ் வந்தாலும் அதில் தலையானவள் என்று நான் சொல்ல விரும்புவது நான் தொலைபேசியில் உரையாடினேன் என்று சொன்ன அந்த அற்புத, ஆனந்த ஆத்மாவைத் தான் சேரும்…

நதிகள் என்றுமே நனைவதில்லை

நெருப்பு என்றுமே குளிர் காய்வதில்லை

காற்றுக்கு என்றுமே வியர்ப்பதில்லை

–    பாரசீக கவிஞரின் அற்புத வைர வரிகள் வேறு யாருக்கு பொருந்தும் என்று எனக்கு தெரியாது. ஆனால் நான் மேற்சொன்ன அந்த பெண்மணிக்கு அந்த வார்த்தை மிக கச்சிதமாக, மிக சரியாக, மிக துல்லியமாக பொருந்தும்….

நான் இந்த அளவிற்கு பாராட்டுவதற்கு என்ன காரணம்?

அப்படி என்ன அந்த பெண்மணி சொன்னார்?

அப்படி என்ன அந்த பெண்மணி செய்தார்?  –  என்பதை அடுத்த கடிதத்தில் விவரிக்கின்றேன்.

 

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

five × five =