கடிதம் – 40 – முலாயும், மொக்கையும்…

ஸ்ரீ

Vastu - Jadav-Payeng forestகடிதம் 34 – ல் ABCD என்றால் Any Body Can Dream  என்று பார்த்தோம்.

ஆனால் AB, CD – க்கு இன்னொரு அர்த்தமும் இருக்கின்றது. அது

Any

Body

Can

Do

யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்பதே ஆங்கில எழுத்துக்களான A,B,C,D – யின் மற்றொரு அர்த்தம். இவ்விடத்தில் நான் ஒரு சிறிய வரியை மட்டும் சேர்த்து கொள்கின்றேன். அந்த வார்த்தை “சரியாக கனவு காணும்” அதாவது “சரியாக கனவு காணும் யார் வேண்டுமானாலும் செய்யலாம்” என்பதே என்னுடைய வாக்கியம்.

இது சாத்தியமா? இது முடியுமா என்று கேட்பவர்களுக்கு “முலாய்” பற்றி முதலில் சொல்லுகிறேன். முலாய் பற்றி நான் சொல்லும் விஷயங்களை படித்தபின் கனவு காணும் யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்பது சாத்தியமா என்று நீங்கள் முடிவு செய்யுங்கள். முலாய் பற்றி பார்ப்போமா?

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கிராமவாசி ஜாதவ் பயேங். அங்குள்ள மக்கள் இவரை “முலாய்’ என அழைக்கின்றனர். ஒரு சமயம்(1970-ம் வருடம்) பிரம்மபுத்திரா நதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் அதிக அளவு பாம்புகள் அடித்துவரப்பட்டிருக்கின்றன. அந்த வெள்ளம் வடிந்தபின் நிறைய பாம்புகள் இறந்த நிலையில் அங்கே கிடந்ததை பார்த்த ஜாதவ் அதற்கு காரணம் “மரங்கள் இன்றி அதிகரித்த வெப்பத்தினால்தான் இந்நிலை..” என்று உணர்ந்து கொண்டார். அப்போது அவருக்கு வயது 16.

இது சம்பந்தமாக வனத்துறையை அணுகி விசாரித்த போது ஆற்றின் நடுவே உள்ள அந்த மணல் படுகையில் மரங்கள் எதுவும் வளராது. மூங்கில் மரம் வேண்டுமானால் வளரலாம். முடிந்தால் முயற்சி செய்து பாருங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள். ஒருவரும் உதவி செய்யாதபோது தனி நபராக செயலில் இறங்கிவிட்டார் ஜாதவ்.

1980-ஆம் ஆண்டில் அசாமில் ஜோர்ஹாட் மாவட்டத்தில் கோகிலமுக் இடத்துக்கு அருகில் 200 ஹெக்டேர் மணல் படுகையில் “சமூகக் காடுகள் வளர்ப்பு’ திட்டத்தின்படி வனத்துறையினர் மற்றும் தொழிலாளர்களும் இணைந்து மரக் கன்றுகளை நடும் திட்டம் தொடங்கப்பட்டது. பணி முடிந்ததும் மற்றவர்கள் சென்றுவிட, ஜாதவ் மட்டும் மரக்கன்றுகளை பராமரிக்க அனுமதி கேட்டு அங்கேயே தங்கிவிட்டார். பின்னர் வனத்துறையினரும் மற்றவர்களும் இதனை அப்படியே மறந்துவிட்டனர்.

ஏறக்குறைய 200 ஹெக்டேர் பரப்பில் மூங்கில் மட்டும் வளர்த்து வந்த ஜாதவ், பிற மரங்களையும் வளர்க்க முயற்சி எடுத்துள்ளார். ஆனால் மணல் அதற்கு ஏற்றதாக இல்லை. இதற்காக தனது கிராமத்திலிருந்து சிவப்பு எறும்புகளைச் சேகரித்து எடுத்துவந்து மணல் திட்டில் விட்டிருக்கிறார் ஜாதவ். இந்த எறும்புகள் மண்ணின் பண்பை நல்லதாக மாற்றக்கூடியவை.

வெகு விரைவில் மண் பயன்பாட்டுக்கு மாறியது. அந்த இடத்தில் பல வகையான செடி, கொடி வகைகளையும், பலவிதமான மரக் கன்றுகளையும் நட்டிருக்கிறார். இப்படி ஒன்று இரண்டு ஆண்டுகள் அல்ல 30 ஆண்டுகள்!

2008-ஆம் ஆண்டு வரை விளம்பர வெளிச்சம் எதுவுமில்லாமல் ஒருகாடு பரப்பளவிலும் உயரத்திலும் அடர்த்தியிலும் பெருகிக் கொண்டே சென்றிருக்கிறது. கடந்த 2008-ஆம் ஆண்டில், 115 யானைகள் இந்தக் காட்டுப் பகுதிக்குள் புகுந்துவிட்டன. அவற்றைத் துரத்தி வந்த வனத்துறையினர் இந்தக் காட்டைப் பார்த்து அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்திருக்கின்றனர்.

“அரசுப் பதிவேட்டில் இடம்பெறாத இந்தக் காடு, இங்கே எப்படி உருவானது?’ என்று வியந்திருக்கின்றனர். முலாய் பற்றிக் கேள்விப்பட்டு அவரை சந்தித்து விஷயம் முழுவதும் அறிந்து மிக மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.

காடு வளர்ப்புக்காக வனத்துறையோ மாநில அரசோ எந்த உதவியும் செய்யாத போது, யாரையும் எதிர்பார்க்காமல் தனது சமூகக் கடமை இதுவென எண்ணி இத்தனை ஆண்டுகளாக தனது மண்ணுக்காக உழைத்த இவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

காட்டிற்குள்ளேயே மனைவி, இரு மகன்கள், மகளுடன் வாழ்வதற்குப் போதுமான சிறிய குடில் ஒன்றை அமைத்திருக்கிறார். வருமானத்திற்காக, சில மாடுகளை வளர்த்து அதன் பாலை விற்று குடும்பச் செலவைப் பார்த்துக் கொள்கிறார்.

மரங்களே வளராது என்று கூறிய பகுதியில் தேக்கு, அகில், சந்தனம், கருங்காலி, ஆச்சா போன்ற மரங்களும் மூங்கில் காடுகளும் பரவியிருக்கின்றன. காட்டு விலங்குகளும் பறவைகளும் அதிக அளவில் இங்கே வாழ்ந்து வருகின்றன. 100 யானைகளுக்கும் மேற்பட்டவை ஆறு மாதங்களுக்கு மேல் இங்கு வந்து தங்கிச் செல்கின்றன. பறவைகள், விலங்குகளின் சொர்க்கபுரிதான் இந்த “முலாய் காடுகள்’.

சுற்றுலாப் பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் டாம் ராபர்ட், இந்தக் காட்டிற்கு வந்து படப்பிடிப்பை நடத்திச் சென்றுள்ளார். “ஆற்றின் நடுவே மணல் திட்டில் இவ்வளவு பெரிய காடு வளர்ந்திருப்பது அதிசயம்…” என வியந்து சொல்லி சென்று இருகின்றார்.

ஒரு சாதாரண படிப்பறிவு இல்லாத மலைவாழ் முலாய் 550 Hectare காட்டை உருவாக்கி உள்ளார். இவரால் உருவாக்கப்பட்ட அந்த காட்டின் அளவு 550 Hectare. இது உலகப்புகழ் பெற்ற New York City – யின்   Central Park – ஐ (341  Hectare) விட 1 1/2  மடங்கு பெரியது.

இவரால் தனி ஒருவராக இந்த சாதனையை செய்ய முடிந்ததற்கு காரணம் இவருடைய தெளிவான கனவும், தன்னால் செய்ய முடியும் என்கின்ற நம்பிக்கையும் தான். இதற்காக இவருக்கு கிடைத்த உயரிய பட்டம் என்ன தெரியுமா?!

“FOREST MAN OF INDIA”

இன்றைக்கு நான் பார்க்கின்ற பெரும்பாலான இளைஞர்களிடம் இல்லாத தெளிவான சிந்தனை நம் முலாயிடம் இருந்தது. அதிலும் குறிப்பாக அந்த சிந்தைனையில் பொது நலன் பெரிதும் கலந்திருந்தது குறிப்பிடத்தக்கது. சாதாரண முலாயால் முடிந்திருக்கின்றது என்றால் இன்று சமுதாயத்தால் மொக்கையாக பார்க்கப்படும் யாராலும் அவரவர் வரம்புக்கு உட்பட்ட கடின இலக்குகளை எளிதாக அடைய முடியும் என்பது என் கருத்து.

அதற்கு கீழ்கண்ட இரண்டே விஷயங்கள் தான் மிக முக்கியமானவை;

  1. Dream (கனவு)
  2. Belief (தனம்பிக்கை)

அடுத்த கடிதத்தில் கழுகு செய்யும் வித்தையையும், அது நமக்கு கற்று கொடுக்கும் பாடத்தையும் பார்த்து விட்டு மற்ற முக்கிய விஷயங்களை பார்ப்போமா?!!

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

 

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Share this:

1 comment

  1. This True story brings in how the nature,s balance is maintained by good heart ted people like Mr.jhadhav . He did it with strength of his self confidence with dedication. Great Mr.Jhadhav GOD bless him.

    Reply

Write a Reply or Comment

9 + 7 =