கடம்பவனேசுவரர் கோயில்:
கரூர் மாவட்டம் குளித்தலை நகரில் அமைந்துள்ள சிவாலயமாகும்.
தேவாரம் பாடல்பெற்ற சிவாலயங்களில் 65வது தேவாரத்தலமாகவும், தென்கரைத் தேவாரத் தலங்களில் இரண்டாவது தலமாகவும் உள்ளது, தேவரா மூவர்களில் அப்பர் இச்சிவாலயத்தைப் பற்றி பாடியுள்ளார்.
இச்சிவாயலத்தின் மூலவர் கடம்பவனநாதர், அம்பாள் முற்றில்லா முலையம்மை.
சப்த கன்னியர்கள், அகத்தியர், கண்ணுவ முனிவர், முருகன் ஆகியோர் இச்சிவாலயத்தில் இறைவனை வழிபட்டுள்ளனர்.
குளித்தலை நகரானது கடம்பந்துறை, குழித்தண்டலை என்று புராண காலத்தில் அழைக்கப்படுள்ளது.
இத்தலத்தில் #கடம்பம் எனும் மரம் அதிகமிருந்தமையால் கடம்பை, #கடம்பந்துறை, கடம்பவனம் என்று அழைக்கப்பட்டிருந்தது.
சேரமகாசுரனிடத்திலிருந்து திருமால் வேதங்களை மீட்டற்குக் காரணமாகிய திருவருளைப்பெற்ற இடமாதலிற் சதுர்வேதபுரியென்றும், முருகவேள் பூசித்துப் பேறுபெற்றமையிற் கந்தபுரமென்றும் இது பெயர்பெறுகிறது.
#பிரமதேவரால் வழிபட்டுத் திருக் கோயில் முதலியன அமைத்துத் திருத்தேர்விழாவும் நடத்தினதால் பிரமபுரமென்றும் அழைக்ப்படுகிறது.
#தட்சிணகாசி, குழித்தண்டலை என்று பெயரும் இத்தலத்திற்கு உண்டு.
இறைவன் கடம்ப மரத்தில் காட்சியளித்தமையால் கடம்பவனநாதர், கடம்பேசுவரர் என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார்.
இறைவி #பாலகுஜலாம்பாள் என்றும் முற்றிலா முலையம்மை என்றும் அழைக்கப்படுகிறாள். இதற்கு இளமையான முலைகளைப் பெற்றவள் என்று பொருளாகும். அம்பிகைக்கு இரு மகன்கள் இருந்தாலும், அவர்களை கருவில் சுமந்து இறைவி பெறவில்லை என்பதால், #முலைகள் இளமையானது என்று கூறுகின்றனர்.
தல வரலாறு :
அரக்கன் தூம்ரலோசனன் என்பவனை அழிக்க அம்பாள் துர்க்கையம்மன் வடிவில் சென்றாள். அரக்கன் துர்க்கையுடன் கடுமையாக போர் செய்தான்.
அரக்கனிடமிருந்த வரத்தால் துர்க்கையின் பலம் குறைந்தது. அவள் சப்தகன்னியர்களை துணைக்கு அழைத்து போரிடச் செய்தாள். அரக்கன் அங்கிலிருந்து ஓட, அவனை துரத்தி சென்ற சப்த கன்னியர்கள் முனிவரை அரக்கன் என்று எண்ணி அழித்தனர்.
அதனால் கொலைப்பாவமான பிரம்மஹத்தி தோசம் பற்றிக் கொண்டது. அத்தோசத்தினை நீக்க இத்தலத்தில் உள்ள கடம்பவனநாதரை வழிபட்டனர் சப்த கன்னியர்.
இத்தலத்தின் வரலாக சொல்லப்படுகின்ற மற்றொரு கதையில் தூம்ரலோசனன் சப்த கன்னியரை துரத்தி வர அவர்கள் சிவபெருமானின் பின்னே ஒளிந்து கொண்டார்கள். இறைவன் சப்த கன்னியருக்கு அடைக்கலம் தந்து அரக்கனை அழித்தார்.
தல #சிறப்பு :
இச்சிவதலத்தின் கருவறையில் இறைவன் கடம்பவனநாதரின் பின்புறத்தில் சப்த கன்னியரிகள் உள்ளனர். மூலவரின் சன்னிதியில் சப்த கன்னியர்கள் இருப்பது சிறப்பாகும்.
சப்த கன்னியர்களில் ஒருவரான சாமுண்டி துர்க்கையாவார்.
மேலும் இச்சிவாலயத்தில் துர்க்கையம்மன் சன்னதி தனியாக இல்லை.
Share this: