கடந்த காலம் – 2

 
நடுகடலில் தனியாக 
பயமே இல்லாமல்
 
நின்றதும் உண்டு முன்னொரு காலத்தில்
 
 
நாற்பது பேருக்கு நடுவில்
நின்றாலும் 
 
இன்று ஏனோ
பயம் இல்லாமல் நிற்க முடியவில்லை
 
 
கடல் கொடுக்காத பயத்தை
கடல் ஏற்படுத்தாத சினத்தை
 
ஜாதியில் ஏற்றம் கொண்டோர் என்று 
தங்களை தாங்களே தூக்கி பேசுவோர்
 
கொடுத்திட முடிகின்றதே
என்பதே ஒரு வித பயத்தை 
கொடுக்கின்றது இன்றைய வாழ்க்கையில்
 
 
ஆண்டாள் உண்மை
என்றால்
 
அடித்து முன் வருவேன்
இல்லை என்றால்
 
இல்லாமல்
போவதே சிறந்தது என
 
முடிவும்
துணிவும்
வந்து விட்டது என
 
கடல் 
சொல்ல சொல்கின்றது
 
நான்
சொல்லி விட்டேன்.
 
 
ஆண்டாளை
அவள் பிறந்த இடத்தில்
 
இனி
பார்க்க
மாட்டேன்
 
அடுத்த கட்டம்
 
முன் நகர்வோ
பின் நகர்வோ
 
ஆண்டாள் 
பார்த்து கொ(ள்)ல்லட்டும்
 
அவள் இருப்பு இருக்கின்றது
என்பது
உண்மையானால்…
 
என்றும் அன்புடன்
 
ஆண்டாள் P சொக்கலிங்கம்

 

 
Share this:

Write a Reply or Comment

13 − four =