கடந்து செல்வதற்காக தானே இந்த வாழ்க்கை!!!!!!
நரி இடம் போனால் என்ன
வலம் போனால் என்ன
நம்மை விழுந்து
பிடுங்காமல்
இருந்தால் சரி……
பல பேருடைய வாழ்க்கையின்
என்ன ஓட்டமாக இருந்த இவ் விஷயம் இன்று எல்லோருடைய எண்ண ஓட்டமாக மாறி விடும் என்கின்ற அளவிற்கு
காலத்தின் ஓட்டம்
கார்ல் லீவிஸை விட வேகமாக…….
அடுத்து என்ன?
அடுத்த வேலை என்ன?
அடுத்த நாள் என்ன?
அடுத்த மாதம் என்ன?
மனித குலத்திற்கு
விடை தெரியாத
இந்தக் கேள்விகள்
குறித்த ஞானம்
எனக்கு எதற்கு
என்று
நினைப்பவன்
ஒருவனாவது
உண்டா
இவ்வுலகத்தில்
என்று நினைக்காத
பொழுது இல்லை
கடந்த நொடி
இந்த புகைப்படத்தில்
உள்ள ஞானி அவர்களை
பார்க்கும்
வரை…
மணிக்கு 80 km வேகத்தில்
செல்லும்
லாரி..
பிடிமானம் இல்லாமல்
உறங்கா அரங்கன்
படுத்திருப்பது போல்
படுக்கை….
பல்லை காண்பிக்கும்
வெயிலில்
வானத்தையே போர்வையாக போர்த்தி கொண்டு
ஆழ்ந்து சிந்தித்து கொண்டே செல்லும்
இந்த ஞானியின் முகம்
மறுபடியும் எப்போது எனக்கு தெரியும்???!!!!!
மனித குலத்திற்கே
விடை தெரியாத கேள்விகளில் இந்த கேள்வியும் ஒன்றாக இருந்து விட்டுப் போகட்டும்
நடந்து சென்றாலும்
தவழ்ந்து சென்றாலும்
ஊர்ந்து சென்றாலும்
ஓடி சென்றாலும்
பறந்து சென்றாலும்
எல்லாமே ஒரு சனத்திற்கு பிறகு கடந்து செல்வதற்காக தானே….
இதையும் கடந்து செல்வோம்….
என்றும் அன்புடன்
டாக்டர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
Share this: