July 27 2022 0Comment

கசக்கும் உண்மைகள்

கசக்கும் உண்மைகள்

1. கும்பிடும் வரை கடவுள்;
திருட்டுப் போனால் சிலை…!

(ஒன்னும் சொல்றதுக்கு இல்லை)

2. எந்த பூச்சிகள் இறந்தாலும் எறும்புகளே *அதை இறுதி ஊர்வலமாய் எடுத்து செல்கிறது..!

(மிகச் சிறியவையாக இருந்தாலும் ஞானம் அதிகமாக இருக்கிறது இந்த எறும்புகளுக்கு தான்)

3. தெருவில் குப்பை போடுகிறவனை மரியாதையாகவும்
அதை பொறுக்கி சுத்தம் செய்பவனை கேவலமாக பார்க்கும் சமுதாயம் உள்ளவரை நாடு சுத்தம் ஆகாது…!

(ஆகவே ஆகாது…sure)

4. ஒரு மெழுகுவர்த்தியின் தியாகத்திற்கு சற்றும் குறைவில்லாதது
ஒரு தீ குச்சியின் மரணம்..!

(மரணம் ஒரு முடிவு அல்ல… !)

5. வேலைக்குப் போகிறவர்களின் திங்கட் கிழமையை விட
வேலை கிடைக்காதவர்களின் திங்கட் கிழமைகள் கொடூரமானவை…!

(நிதர்சனமான உண்மை)

6. இவன் என்ன நினைப்பான் அவன் என்ன நினைப்பான்னு நினைச்சே வாழ்றோம். *ஆனா உண்மையில ஒருத்தனும் நம்மளைப் பத்தி நினைக்கிறதேயில்ல என்பதுதான் மிகப்பெரிய உண்மை..!

(எல்லாத்துக்கும் காரணம் இந்த எண்ணங்கள் தான்)

7. இந்த டாக்டர்கள் வசதி இல்லாதவன பாத்து அது சாப்புடு இது சாப்புடுனு சொல்லுவார்கள். *வசதி இருக்கிறவனை பாத்து எதையும் சாப்புடகூடாதுனு சொல்லுவார்கள்.!

(எல்லாம் அவன் செயல்)

8. இறுதி வரை வாழ்க்கை இப்படியே இருக்க வேண்டுமே என்ற
கவலை சிலருக்கு,
இப்படியே இருந்துவிடுமோ என்கிற கவலை சிலருக்கு…!

(ஒரு முழம் கூடப்போறதும் இல்லை குறையப் போறதும் இல்லை)

9. மொபைல் போனை முதலில் வைத்திருந்தவர்கள் ஆச்சர்யப்படுத்தினார்கள்.
இப்போது வைத்திருக்காதவர்கள் ஆச்சர்யப்படுத்துகிறார்கள்…!

(யூஸ் பண்ணத் தெரியல.. அவ்ளோதான்)

10. தூக்கம் வராமல் முதலாளி…
தூங்கி வழியும் வாட்ச்மேன். என்ன ஒரு முரண்பாடு..!

(கரன்சி பண்ற வேலை)

முரண்பாடுகளின் ஒட்டுமொத்த உருவம் தான் மனித வாழ்க்கை
இன்றைய வாழ்க்கை

முரண் அகற்றுவோம்
முரண்பாடு கலைவோம்
வாழ்வோம் வெல்வோம்

என்றும் அன்புடன்
Dr ஆண்டாள் P சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

four × 2 =