ஒரு வேளை சோறு:


சொந்த வீடு
என்பது நடுத்தர
வர்கத்தின் ஒரே
கனவு
சில சமயங்களில்
அது நிஜமாகாமலயே
கனவாகவே இருந்துவிட்டு
போய் விடுகின்றது
சிலருக்கு மட்டும்
பல சமயங்களில்
அது நனவாகின்றது….
அப்படிப்பட்ட சிலரில்
பலர் என்னை அவர்கள்
கனவு மெய்ப்பட
தொடர்பு கொண்டதுண்டு.
இன்றுவரை அதில்
வெகு சிலரே
என்னுடன்
பிரயாணப்பட முடிகின்றது
அந்த சிலரில்
ஒன்றைப் பற்றிய
குறிப்பு இது:
என்ன இருந்து
என்ன செய்ய
ஒருத்தி நம்
கூட பொறக்கலியே
என எண்ணிலடங்கா
தடவை கலங்கியதுண்டு
ஊருக்கே
கலங்கரை விளக்கமாக
இருந்தாலும்
நமக்கு தேவையான
சில விளக்கங்களை
துல்லியமாக
அடித்து உரிமையோடு
சொல்ல
உறங்கா அரங்கனின்
உயிர் துடிப்பை விட
ஒரு உயிர்
இந்த பூமியில்
உண்டா என்ன????
ஒருத்தி என்னடா
உறவு
ஓராயிரம் உறவாக
நான் இருக்க
நீ ஏன்
கலங்கணும்
என் கண்மணியே
என சொல்லி
ரங்க மன்னனின்
நாச்சியார்
அதை பின்
முறியடித்ததும் உண்டு
திருச்சியில்
சில தினங்களுக்கு
முன் நடைபெற்ற நிகழ்வு
என்னுடைய நெடிய
பயணத்தில்
மீண்டும் ஒருமுறை
கோதை தன்
இருப்பை
எனக்கே உறுதிபடுத்தி
காட்டிய
ஒரு புதிய பாதை
எனக்கு இவரை
தெரியும்
அவரை தெரியும்
என நான்
யாரை பற்றியும்
யாரிடமும் பேசமாட்டேன்
ஆனால் இன்று பேச போகின்றேன்
எனக்கு திருச்சியில்
மிக பழைய வாடிக்கையாளர்
என்று சிலர் உண்டென்றால்
அதில் அரசு பள்ளி
ஆசிரியை நாகஜோதியும் ஒருவர்
எனக்கு மிகவும் பிடித்த
ஆத்மா
அவர் மூலமாக
அவருடைய தோழி
திருச்சி வசந்தி
#டீச்சரும் பழக்கம்
எனக்கு ஏனோ
வசந்தி டீச்சர்
என்றாலே பயம்
காரணம் அவர் கேட்ட
கேள்விக்கு பதில்
சொல்வதற்கு முன்னே
குறைந்தது இருபது
கேள்விகளுடன்
மறுபடியும் முதலில்
இருந்து ஆரம்பிப்பார்
என் தம்பி
சுப்பு இருக்க
தப்பித்தேன்
இருந்தாலும்
பேரன்பு, பெரும்
மரியாதை என்னிடம்
#புது_வீடு
#பிரவேசத்திற்கு
வர வேண்டும் நீங்கள்
என்றபோது
அதுவும் சென்னை வந்தே
அழைத்தபோது
மறுக்க முடியாமல்
வர ஒப்புதல் தெரிவித்தேன்.
சென்னை #திருச்சி
காலை விமானத்தில்
அவரை பார்க்க சென்றபோது
வீட்டுக்கு வந்திருந்த
அத்தனை சொந்தங்களையும்
விட்டுவிட்டு என்னை
அழைக்க விமான நிலையத்தில்
அவரும், ஜோதி டீச்சரும்
வந்து காத்திருந்ததை
பார்த்தபோது
கொஞ்சம் கலங்கி
தான் போனேன்
நான் ஒன்னும் கூட
பொறந்த உறவும் இல்லை
தமிழக அரசாங்கம் போல்
இலவசமாக சேவை
அளிப்பவனும் இல்லை
பணத்திற்கு
தான் சேவை என்றாலும்
பாசத்திற்கு முன்
#பணம் பறந்து
போனது
மூவரும் ஒன்றாக
புது
வீட்டை நோக்கி
பிரயாணப்பட்டோம்
நிறைய பேனர்கள்
என்னை வரவேற்று…
மொத்த குடும்பமும்
சந்தோஷப்பட்டது
என் வரவை
தன வரவாக
நினைத்து தூக்கி
வைத்து கொண்டாடியது
மொத்த குடும்பமும்
நல்ல உணவு அருந்தி
பின் பெரிய நன்றி
தெரிவித்து வந்தேன்
-சென்னைக்கு சந்தோசமாக
எத்தனயோ ஆயிரம் வீடுகளில்
என் காலடி பட்டு இருந்தாலும்
என் வசந்தி
என்னை ஒசத்தி வைத்து விட்டாள்
தன் வீட்டை
என்னை வைத்து தொறக்க சொல்லி
இது
ஏதோ
இதற்கு ஆசைப்பட்டு
தான் நான்
இருந்தேன் என்பதற்காக
சொல்லவில்லை
என்றோ
எதையோ இழந்து
பார்த்தவர்களுக்கு
இந்த விஷயம்
பெரிய விஷயமாகவே
தெரியும்….
ஒத்தை வேலை சோறு
எவ்வளவு
முக்கியம் என
பட்டினி கிடப்பவனுக்கே
அதன் அருமை புரியும்
என் அருமையை
எனக்கு உணர்த்திய
என் அருமை
சகோதரிகளுக்கு நன்றி
இந்த ஒன்று
போதும்
என் வாழ்க்கையை
நான் அடுத்த
கட்டம் நகர்த்துவதற்கு
இந்த தூய
அன்பிற்கு
ஆயிரம் முறை பறக்கலாம்
சிறகில்லாமல்
வனமும்
வானமும்
வசப்பட்டு
வாழ்க்கையை
கொண்டாடுவதற்கே
இந்த பிறப்பு என
உணர்த்திய
/ மெய்ப்பித்த
ஆண்டாளுக்கு
நன்றி நன்றி நன்றி நன்றி
என்றும் அன்புடன்
Dr.ஆண்டாள் P சொக்கலிங்கம்
ஆண்டாள்Pசொக்கலிங்கம்
Share this: