July 17 2022 0Comment

ஒரு கண்ணாடியின் கதை

ஒரு கண்ணாடியின் கதை

தலைசிறந்த துறவி ஒருவர்
எங்கே சென்றாலும் தன்
கையில் ஒரு சிறு கண்ணாடியை எடுத்துப்போவார்
துறவி அந்த கண்ணாடியை எடுத்து அவருடைய முகத்தை பார்க்கும் போதெல்லாம் அவரது
சிஷ்யர்கள் தங்களுக்குள்
நம் குருநாதருக்குத் தான்
பெரிய அழகுன்னு நினைப்பு
எப்ப பார்த்தாலும் கண்ணாடியில
தன் மூஞ்சைத் தானே பார்த்து ரசிச்சுகிட்டு இருக்கார்
என பேசி சிரித்து கொள்வார்கள்
சிஷ்யர்கள் இப்படி பேசுவது குருநாதருக்கும் தெரியும்
ஆனால் அவர் தன் பழக்கத்தை மாற்றி கொள்ளவே இல்லை .
ஒருநாள் அந்த துறவியைப் பார்க்க
ஓர் அரசர் வந்திருந்தார்
அரசர் ஆசிரமத்தினுள் நுழைந்தபோது துறவி வழக்கம்போல் தன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக்கொண்டிருந்தார்
இதைக் கவனித்த
அரசருக்கு ஆச்சரியம்
ஐயா
நீங்கள் எல்லாவற்றையும் துறந்த முனிவர்
ஆனால் இப்படி அடிக்கடி கண்ணாடியில் முகம் பார்க்கும் ஆசையை மட்டும் தவிர்க்கமுடியவில்லையா…???
என்று நேரடியாகவே
துறவியிடம் கேட்டுவிட்டார் அரசர்
துறவி சிரித்தார்
அரசே
எனக்கு ஏதாவது பிரச்சினை வந்தால்அந்தப் பிரச்னைக்கு
யார் காரணம் என்று தெரிந்துகொள்ள இந்தக் கண்ணாடியைப் பார்ப்பேன்
அப்போது கண்ணாடியில் தோன்றும் உருவம்தான் என்னுடைய பிரச்சினைக்கு முழு முதல் காரணம் என்று புரிந்துகொள்வேன்
அப்புறம் அந்தப் பிரச்னைக்கு
தீர்வு காண வேண்டாமா…???
அதைச் செய்வதற்குப
பொருத்தமான நபர் யார்
என்று தேடுவேன்
மறுபடியும் கண்ணாடியைப் பார்ப்பேன்
அங்கே தோன்றும் உருவம்தான் இந்தத் பிரச்சினையை
தீர்க்கக்கூடிய சரியான நபர்
என்று புரிந்துகொள்வேன்
எப்போதும் இந்த கண்ணாடி என்னிடம் இருப்பதால்
என்னுடைய நல்லது
கெட்டதுக்கு யார் காரணம் என்கிற உணர்வை நான் என்றுமே மறப்பதில்லை என்றார் அந்த குரு
எனக்கு இந்த குருவின் வார்த்தைகள் சரி என்று படுகின்றது
கண்ணாடியை சுமந்து தான்
நாம் இதை செய்ய வேண்டும்
என்கிற அவசியம் தற்காலத்தில் இல்லாவிட்டால் போனால் கூட ஒவ்வொரு முறை நாம் கண்ணாடியை பார்க்கும் போதும் நமக்கு இந்த அறிவும் தெளிவும் பிறக்கட்டும்
மிக முக்கியமாக
கண்ணாடியை நாம் சிறந்த நண்பனாக ஆக்கிக் கொள்வோம்
ஏனென்றால் நாம்
அழும்போது அது சிரிப்பதில்லை….
என் நண்பன் கண்ணாடி வாழ்க..
வெற்றி நமதே நாளை நமதே
என்றும் அன்புடன்
Dr ஆண்டாள் P சொக்கலிங்கம்
Share this:

Write a Reply or Comment

one × three =