June 21 2022 0Comment

ஒன்று + ஒன்று

ஒன்று + ஒன்று

ஒன்று வாங்கினால்
மற்றொன்று இலவசம்
என்பது வியாபாரத்தில்
மட்டுமல்ல,வாழ்க்கையிலும்
பல சமயம் நடக்கின்றது…!
உதாரணத்திற்கு
கோபத்தை
வாங்கினால்
இரத்தக் கொதிப்பு இலவசம்!
பொறாமையை
வாங்கினால்
தலைவலி இலவசம்
வெறுப்பை
வாங்கினால்,
வேண்டாத பகை இலவசம்
கவலையை
வாங்கினால்,
கண்ணீர் இலவசம்
மாறாக….
நம்பிக்கையை வாங்கினால், நண்பர்கள் இலவசம்!!!!!
உடற்பயிற்சியை வாங்கினால், ஆரோக்கியம் இலவசம்!!!!!
அமைதியை வாங்கினால்,
ஆனந்தம் இலவசம்!!!!!!
நேர்மையை வாங்கினால்,
நித்திரை இலவசம்!!!!!!
அன்பை வாங்கினால்…..
அனைத்து நன்மைகளும் இலவசம்!!!
இலவசமாக
எது வேண்டுமென்று
நாம் முடிவு செய்ய
வேண்டிய நேரம் இது
நாம் புதைத்ததை
நாமே எடுத்துவிடுவோம் இல்லாவிட்டால்
நாம் புதைக்கப்படும்
நாள் வெகு தொலைவில்
இல்லை என்பதை நினைவில் நிறுத்திக் கொள்வோம்
குலுக்கும் கைகளுக்குள்
ஆயுதங்கள் தேடுவதை
விட்டுவிட்டு அன்பை
மட்டும் தேடி அன்பை
மட்டும் காண்போம்….
என்றும் அன்புடன்
டாக்டர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
Share this:

Write a Reply or Comment

nine + 14 =