August 16 2020 0Comment

ஒத்த புள்ளையும் சுகன்யாவும்…

ஒத்த புள்ளையும் சுகன்யாவும்…
 
ஒத்தையாக பிறந்ததால்
என் பிள்ளைகளுக்கு
என் பக்கம் இருந்து
அத்தை
மாமா
சித்தப்பா
சித்தி
பெரியப்பா
பெரியம்மா
உறவு இல்லாமல் போனது…
 
இந்த வருத்தம்
எந்த ஜென்மத்திலும்
நீங்காத துன்பமாகவே இருக்கப்போகின்றது.
இருந்துவிட்டுப் போகட்டும்..
 
கவிக்கோ சொல்வார்
எனக்கு ரோஜாவை விட அதில் உள்ள முட்களை தான் மிகவும் பிடிக்கும் என்று.
 
காரணமாக அவர் முன் வைப்பது இந்த வாதத்தை தான்.
 
ஏன் முட்களை பிடிக்கும்
என்றால்
அதுதான் தொட்டவுடன்
ரத்த பாசத்தை காட்டுகின்றது என்று………..
 
பார்த்தவுடன்
ரத்த பாசத்தை காட்டக்கூடிய
சில உறவுகளும் அப்படி
எனக்கு உண்டு…
 
மேட்டுப்பாளையம்
சுகன்யாவை
போல…..
 
சிறந்த கணவர்
சிறந்த அம்மா
சிறந்த குழந்தைகள்
சிறந்த தம்பி
சிறந்த வாழ்க்கை
சிறந்த நிறுவனங்கள்
நிறைந்த செல்வம்
என வாழும்
சுகன்யா உடன்
நடந்த சந்திப்புகளை
விரல்விட்டு எண்ணிவிடலாம்….
 
இத்தனை வருட கால பழக்கத்தில் சில முறையே பேச்சுக்கள் தொலைபேசி வாயிலாக….
 
என்னை சில நொடிகள் மட்டுமே பார்த்தாலும்
 
சில நிமிடங்கள் மட்டுமே பேசினாலும்
 
அதற்குள் ஓராயிரம் விஷயங்களை உள்ளடக்கி பேசத்தெரிந்த அற்புதமான மனுஷி…
 
மணி
மகேஷ்
ஆண்டாள் 1
ஆண்டாள் 2
சின்ன குடும்பம்
பெரிய ஆனந்த
பிரம்மாண்ட வாழ்க்கை…
 
இவரிடம் இந்த நொடி வரை சொல்லாதது..
 
எனக்கு அக்காவாக தங்கையாக யாரையும் என் கூட பிறக்க வேண்டுமென்று நான் ஆசைப்பட்டது இல்லை…
 
சுகன்யா மட்டும் விதிவிலக்கு.
 
பார்க்கலாம் மறுபிறவி உண்மை என்றால்
கன்னடமும் தமிழும் சேர்ந்து பிறக்கின்றதா என்று…..
 
என்னால் அல்ல
 
கடும் உழைப்பால் ஒவ்வொரு வருடமும் உயர்ந்து கொண்டு உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றார்கள்…
 
ஒவ்வொரு முறையும் இவர்களை நான் பார்க்கும் பொழுது
 
நான் வெற்றி பெற்றதாகவே பார்க்கின்றேன்….
 
வெற்றி தொடரட்டும்.
பிரிய மனமில்லாமல் கனமான இதயத்துடன் இன்று பிரிய நேரிட்டாலும் மீண்டும் சந்திப்பேன் சுகன்யாவின் வெற்றிகளை பார்க்க பலமுறை…….
 
நன்றி வணக்கம் சர்வம் கிருஷ்ணார்ப்பணம்
Dr ஆண்டாள் P சொக்கலிங்கம்
Share this:

Write a Reply or Comment

9 + 4 =