April 16 2019 0Comment

எமனேஸ்வரமுடையார் திருக்கோயில்:

எமனேஸ்வரமுடையார் திருக்கோயில்:
திருக்கடையூரில் எமனை சம்ஹரம் செய்த கால சம்ஹரமூர்த்தியாக அருளும் சிவன், இத்தலத்தில் அனுக்கிரமூர்த்தியாக இந்திர விமானத்தின் கீழ் காட்சி தருகிறார்.
இங்கு ஆயுஷ்ய ஹோமம், அறுபது, எண்பதாம் திருமணம் செய்துகொண்டால் ஆயுள் நீடிக்கும் என்பது நம்பிக்கை. மாசிமகத்தன்று சிவனின் அம்சமான, முருகனே அவரது சார்பில் தீர்த்தத்திற்கு எழுந்தருளுகிறார்.
கார்த்திகை கடைசி திங்கள்கிழமையன்று இவருக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுவது #சிறப்பு.
இத்தலத்தின் தலவிநாயகர்: ராஜகணபதி
#சிறப்பம்சங்கள்:
அம்பாள் #சொர்ணகுஜாம்பிகைக்கு, இரண்டு கரங்களுடன் தனிச்சன்னதியில் இருக்கிறாள்.
மார்கழியில் #பைரவாஷ்டமி, புரட்டாசியில் துர்க்காஷ்டமியன்று பைரவருக்கு விசேஷ ஹோமம் மற்றும் பூஜைகள் நடக்கிறது.
இத்தலம் #எமன் வழிபட்ட தலம் என்று கூறப்படுகிறது.
Share this:

Write a Reply or Comment

17 − two =