என்.டி.ராமராவ் மகனும் நடிகருமான ஹரி கிருஷ்ணா விபத்தில் பலி:
ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் என்.டி ராமாராவின் மகனும், நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் தந்தையுமான நந்தமுரி ஹரிகிருஷ்ணா கார் விபத்தில் இன்று காலை மரணமடைந்தார். அவருக்கு வயது 61.
ஆந்திர முன்னாள் முதலமைச்சரும் நடிகருமான என்.டி ராமாராவின், நான்காவது மகன் நந்தமுரி ஹரிகிருஷ்ணா. குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கிய இவர், பின்னர் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து பணியாற்றினார். எம்.பி.யாகவும் இருந்துள்ளார்.
இவர் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கவாலி என்ற ஊரில் நடக்கும் ரசிகர் ஒருவரின் திருமணத்துக்காக இன்று அதிகாலை காரில் சென்று கொண்டிருந்தார். அவரே காரை ஓட்டிச் சென்றார். நலகொண்டா மாவட்டத்தில் உள்ள நர்கெட்பள்ளி – அட்டன்கி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று எதிர்பாராதவிதமாக சென்டர் மீடியனில் கார் மோதியது. இதையடுத்து கார் தடுமாறி கவிழ்ந்தது. ஹரி கிருஷ்ணா தூக்கி வீசப்பட்டார். இதில் அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை அடையாளம் கண்டு அருகில் உள்ள காமினேனி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
கடந்த 2014-ம் ஆண்டு நலங்கொண்டா அருகே நடந்த கார் விபத்தில்தான் ஹரிகிருஷ்ணாவின் மகன் ஜானகிராமும் மரணமடைந்தார். அவர் விபத்துக்குள்ளான இடத்துக்கு அருகிலேயே ஹரிகிருஷ்ணாவும் விபத்தில் சிக்கி மரணமடைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த ஹரி கிருஷ்ணாவுக்கு கல்யாண் ராம், ஜூனியர் என்.டி.ஆர் ஆகிய மகன்களும் சுகாசினி என்ற மகளும் உள்ளனர். இதில் கல்யாண் ராமும் ஜூனியர் என்டிஆரும் ஆந்திராவின் டாப் ஹீரோக்கள். ஹரிகிருஷ்ணாவின் சகோதரர் பாலகிருஷ்ணாவும் பிரபலமான தெலுங்கு ஹீரோ என்பது குறிப்பிடத்தக்கது. மறைந்த ஹரிகிருஷ்ணா ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவி்ன் மைத்துனர் ஆவார்.
இவரை சரியாக 4 வருடங்களுக்கு முன் திரு.ஹரி கிருஷ்ணா அவர்களை நான் காஞ்சி காமாக்ஷி அம்மன் கோவிலில் வைத்து பார்த்து இருக்கின்றேன்.
அவரும் நானும் மட்டும் ஏறத்தாழ 20 நிமிடம்
காயத்ரி மணடபத்தில் இருந்து காஞ்சி காமாக்ஷி அம்மனை தரிசனம் செய்தோம் எந்தவித குறுக்கிடும் இல்லாமல்
எந்தவித சலனமும் இல்லாமல் காஞ்சி காமாக்ஷி அம்மனையே பார்த்து கொண்டிருந்தார்
யாரும் அவரை எழும்ப சொல்லவில்லை இருந்தாலும் தன்னால் பிற பக்தர்களின் தரிசனத்தில் தொந்தரவு வரக்கூடாது என்று தெலுங்கில் சாஸ்த்ரிகளிடம் சொல்லியவாரே எழுந்தார்.
நானும் மரியாதைக்கு வணக்கம் சொல்லிவிட்டு எழுந்தேன்
என்னிடம்
நீங்கள் ஆந்திராவா?
பதில் : இல்லை
உங்களுக்கு தெலுங்கு தெரியுமா?
பதில்: தெலுங்கில் தெரியாது என்று பதில்
கூறவே எப்படி தெலுங்கு தெரிந்து கொண்டீர்கள் என்றதற்கு
உங்கள் ஊர் ஷுகர் பாக்டரியில் வேலை பார்த்து உள்ளதாக சொன்னதற்கு
உடனே அவர் சந்தோசம் தமிழர்கள் சிறந்த உழைப்பாளிகள் என்று கூறி கொண்டே… வருகின்றேன் என்று சொல்லி விடை பெற்று சென்றார்
விக்கித்து போய் விட்டேன்
எவ்வளவு பெரிய மனிதர்
இவ்வளவு யதார்த்தமாக இருக்கின்றாரே?
நாமும் வளர்ந்த பிறகு இப்படி தான் இருக்க வேண்டும் என என் மனதில் இருத்திக் கொண்ட சந்திப்பு
ஏனோ நாம் ஒருமுறை சந்திக்கும் / பார்க்கும் மனிதர்களில் 99 % பேரை திரும்ப இன்னொரு முறை பார்க்கப்போவதே இல்லை என்கின்ற உண்மை தெரிந்து / புரிந்து கொள்ளும் முன்னரே அந்த சந்திப்பு எதையாவது நமக்கு புரிய வைத்து விட்டு மனித வாழ்க்கையே முடிந்து விடுகின்றது
உண்மையை உரக்க உணர்த்திய அன்னார் குடும்பத்திற்கு என் கண்ணீர் அஞ்சலி…
Share this: