என்ன தவம் செய்தேனோ!!!!
இன்று நம்மிடத்தில்
அளந்துபேசும் சிலர்
ஒரு காலத்தில்
அளவுக்கு அதிகமாய்
அன்புடன் பேசியவர்களே..!!
என்பதை காலம்
என்னை கடத்தி
புரிய வைத்தது…
என்னிடம்
எதிர்பார்த்தது கிடைத்தவுடன் எத்தனையோ இடங்களில்
எச்சில் இலை போல தூக்கி வீசப்பட்டிருக்கின்றேன்
இந்த இரண்டு விஷயங்களும் என்னை மிகவும் பக்குவப்படுத்திவிட்டன இன்று அளவுக்கு….
பக்குவம் தானாக நடந்ததல்ல
பக்க பலமாக சில உறவுகள் எதையும் எதிர்பாராமல் என்னுடன் எனக்கே எனக்கு என்று கிடைத்ததன் விளைவே இந்த நிகழ்வு நடந்தேறியதற்கு ஒரே காரணம்….
அந்த வகையில் ஏறத்தாழ 12 வருடங்களாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் என்னை மனிதத்துடன்
இன்றைக்கும் என்றைக்கும் நடத்திக் கொண்டிருக்கும் எனது அன்பு சகோதரிகள் திருச்சியை சேர்ந்த அரசு பள்ளியின் ஆசிரியர்களான திருமதி நாகஜோதி மற்றும் திருமதி வசந்தி அதில் குறிப்பிடத்தக்கவர்கள்.
இன்றைக்கு (19/02/203)
திருச்சி வழியாக நான் செல்வதை அறிந்து என்னுடன் அமர்ந்து ஒரு மணி நேரம் ஒன்றாக இரவு உணவு எடுத்துக் கொள்ளும் வகையில் திட்டம் வகுத்து குடும்பத்துடன் இருவரும் வந்து இருந்து உணவு உண்டு கழித்து மகிழ்ச்சியுடன் அவரவர் கூடு நோக்கி திரும்ப எத்தனித்தபோது எடுத்து கொண்ட புகைப்படம்.
தடுக்கி விழும் போது தான் தெரிகிறது. தள்ளி விடுபவர் யார் தூக்கி விடுபவர் யார் என்று என் நண்பர் ஒருவர் அடிக்கடி என்னிடம் சொல்வார்
ஒருகால் தடுக்கி விழக்கூடிய நிலையில் நான் இருந்தால் என்னை
தடுக்கி விழ விடாமல் தங்களையே முட்டாக கொடுத்து என்னை
நிலை நிறுத்துவதற்கும்
அதையும் மீறி தடுக்கி விழுந்து விட்டால் என்னை தூக்கி நேராக நிறுத்துவதற்கும் எனக்கே எனக்கென்று கடவுள் கொடுத்த இந்த இரண்டு வரப்பிரசாதங்களை என்றும் என்னுடன் பிரயாணப்படும் வகையில் தான் என் பிரயாணத் திட்டம் அமைக்கப்படும்
அதற்கு மிக முக்கியமான காரணம் நம்முடைய பயணத்தில் நம்முடன் பயணிப்பவர்கள் மிக மிக முக்கியமானவர்கள் எதில் பயணிக்கிறோம் என்பதை விட…..
நல் உறவுகளை கொடுத்த ஆண்டாளுக்கு நன்றி
செல்பி உபயம்
Dr ரம்யா அண்ணாதுரை
என்றும் அன்புடன்
முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்