January 15 2024 0Comment

எட்டாயிரத்தில் ஒருவன்:

எட்டாயிரத்தில் ஒருவன்:

கடவுள் நம்பிக்கை இல்லாமல் வாழ்ந்து வாழ்க்கையின் முற்பகுதி சேதாரங்களுடன் சென்ற பின்

இரண்டாம் பகுதியில் ஆண்டாள் போட்ட பிச்சையால் செய்கூலி இல்லாமல் இந்த அளவுக்கு உச்சத்தை தொடுவேன் என்று கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை.

சென்னை பட்ரோடு ஏழு கிணறு தெருவை சேர்ந்த ஸ்ரீராமுலு தாத்தா ஜானகி ஆயா ஆகியோரால் வளர்க்கப்பட்டதால் தான் என்னவோ கடவுள் நம்பிக்கை ஏற்பட்ட பிறகு ( 1996 க்கு பிறகு) ஸ்ரீராமனை நோக்கி கால்கள் நகர்ந்தது என நம்புகின்றேன்.

பிள்ளை பிறக்கும் முன்னே ஸ்ரீ ராம ஜெய ராம என்ற பாட்டை தவிர தாயின் வயிற்றில் இருந்த பத்து மாதங்களும் என் பிள்ளை வேற எந்த பாட்டையும் எந்த மந்திரத்தையும் கேட்டதில்லை.

முருகனுக்கும் ராமனுக்கும் நன்றி சொல்லும் விதமாகத்தான் அவனுக்கு சண்முக ஸ்ரீராம் என்று பெயரிடப்பட்டது.

வேதம் தெரியாது
பெரிய மந்திரங்கள் மூளையில் கிடையாது; சொல்லவும் வராது
சுத்தமாக தமிழ் இலக்கணம் புரியாது
இதுவரை கடவுளுக்கு என்று நாள் முழுவதும் பட்டினி கிடந்தது கிடையாது
கோவிலே கதி என்று இருந்ததும் இல்லை

இருந்தாலும்
எனக்கு எது தெரியும் தெரியாது என்பதை ஒரு ஓரமாக ஒதுக்கிவிட்டு என்னை நான் பார்த்தேன் என்றால்

எனக்குத் தெரிந்த ஒரே விஷயம் ஆண்டாள் திருச்செந்தூர் முருகன் அனுமன் ஸ்ரீராமன்

அந்த மாசற்ற நம்பிக்கையும்

என் முன்னோர்கள் செய்த புண்ணியமும்

ஶ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவையை சார்ந்த அன்பர்கள் மற்றும் நண்பர்களுடைய ஆசிர்வாதமும்

உங்களுடைய மேலான அரவணைப்பும்

ராஷ்டிரீய ஸ்வயம் சேவக சங்கத்தின்
வழிகாட்டுதலும்
ஒருங்கே இணைக்கப்பட்டு
இன்றைக்கு இந்த உலகத்தில் வாழும் எட்டாயிரத்தில் ஒருவனாக அங்கீகரிக்கப்பட்டு 22 1 2024 அயோத்தியில் நடைபெறும் ஸ்ரீ ராமர் கோவில் பிராணபிரதிஷ்டை விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ளேன் என்பதை மிகுந்த பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்

வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத மகிழ்ச்சியை கொடுத்த ஸ்ரீ ராமனுக்கு என் மனமார்ந்த நன்றி.

வரலாற்று சிறப்புமிக்க இந்த விழாவின் அழைப்பிதழை உங்கள் அனைவருக்கும் காணிக்கையாகின்றேன்.

சிறப்பு நன்றிகள் என்னுடைய குழுவை சேர்ந்த பாண்டிச்சேரி கணேசன் மதுரை திரு நாகராஜன் சென்னை திரு பிச்சுமணி ஸ்ரீவில்லிபுத்தூரை திரு சக்திவேல் நாமக்கல்லை திரு சரவணன் வெள்ளகோவிலை திரு சாய் சிவா மண்ணச்சநல்லூர் திரு கயிலைகோவிந்தன் பெரம்பலூர் திரு சண்முகம் சென்னை திரு அசோகன் திண்டுக்கல் அழகர் வித்யா மற்றும் இதற்காக உழைத்த அத்தனை மேலும் சில உறவுகளுக்கும்.

என்றும் அன்புடன்

முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

twenty + fifteen =