உன் நம்பிக்கை பெருக!!!!!
ஒருவருக்கு எத்தனை
கவலைகள் வந்தாலும்
அவரை உந்தித் தள்ளுவது
அவர் மீது அவர் கொண்டுள்ள தன்னம்பிக்கை ஒன்று மட்டுமே
அது கொஞ்சம் குறைந்தாலும்
அவர் பல தடுமாற்றங்களை
சந்திக்க நேரிடும்
எனவே தன்னம்பிக்கை கொஞ்சம் குறைவதைப் போல் உணர்ந்தாலும்
அதை தவிர்க்க இந்த விஷயங்களை நினைவில் நிறுத்தி கொண்டு இந்த விஷயங்களை மட்டும் செய்யுங்கள்
1 காரணம்
முதலில் தன்னம்பிக்கைக்
குறைய என்ன காரணம்
என்று அலசுங்கள்
உங்கள் முடிவு
தவறாகிவிட்டதா,
தோல்வி,
ஏமாற்றம்,
குடும்பத்தில் மகிழ்ச்சியின்மை, எதிர்மறை எண்ணங்கள்
இப்படி எது உங்களது தன்னம்பிக்கையை இழக்க வைத்தது / வைக்கிறது
என்பதை கண்டுபிடிங்கள்
எதிரே நிற்கும் எதிரியையும் எதிர்த்து நிற்கும் வீரம் இருக்கும் போது, கண்ணுக்கு தெரியாத துன்பத்தை நினைத்து துவண்டு போவது ஏனோ!
துணிந்து நில்லுங்கள்…..
2 இலக்கு
நீங்கள் என்னவாக வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள்
கவலைகள்,
பிரச்சினைகள்
நம்முடைய இலக்கை
மறைத்துவிடும்
எனவே இந்த நேரத்தில் தான்
இது நம்முடைய
இலக்கு அல்ல
நாம் துவண்டு விடக் கூடாது
என சொல்லிக் கொள்ளுங்கள்
நீங்கள் என்னவாக
விரும்புகிறீர்கள்,
உங்கள் இலக்கு என்ன
என்பதை நினைத்து
அதை சாத்தியமாக்க பயணித்தே
ஆக வேண்டும் என பயணியுங்கள்
உயரத்தை அடைய
நம்பிக்கை அவசியம்
அந்த நம்பிக்கை
உங்கள் மேல்
இருப்பது அத்தியாவசியம்
3 ஊக்கம்
உங்களை ஊக்கப்படுத்தும்
சில வாக்கியங்கள்,
தலைவர்களின் பொன்மொழிகளை அடிக்கடி சொல்லிக்கொள்ளுங்கள்
சுவர்,
அடிக்கடி பார்க்கும் கண்ணாடி
முன் எழுதி ஒட்டிக்கொள்ளுங்கள்
வீழ்ச்சிகள் எல்லாம்
வீழ்ச்சிகள் அல்ல
அவை நாளைய
எழுச்சியின் அடித்தளங்கள்
4 பயம்
பயம்தான் நம்மை பின்னோக்கித் தள்ளும் முதல் விஷயம்
எனவே அந்த பயத்துடன் போராடுங்கள்
எதனால் பயம் வருகிறதோ
அதை நேருக்கு நேர்
சந்தித்து எதிர்கொள்ளுங்கள்
வழிகள் அனைத்தும் அடைத்து வழியே இல்லை என்னும் நிலையில்
முழு இருள் உன்னை சூழ்ந்தாலும், இனி அவ்வளவு தான் என்று சுற்றமும் முற்றமும் கைவிட்டு கைகழுவி கடந்து சென்றாலும்,
அந்த இருளையும் வாய்ப்பாக பயன்படுத்தி உறுதியுடன் போராடி உயர்ந்து நில்
தலை நிமிர்ந்து நில்
எதிர்த்து நின்ற எதிரியும் எழுந்து நின்று கை கொடுப்பான்
உன்னை கடந்து சென்ற கயவனும் கை தட்டி ஆர்ப்பரிப்பான்
எட்டுத்திக்கும் உன் பெயர் ஒலிக்கும்
5 தாழ்வு மனப்பான்மை
உங்களின் தன்னம்பிக்கை
குறைய தாழ்வு மனப்பான்மை
தான் முதல் எதிரி
அதற்கு உங்களைச் சுற்றி இருப்பவர்கள் கூட காரணமாக இருக்கலாம்
அப்படி இருந்தால்
உங்களின் திறமை என்ன
உயர்ந்த விஷயங்கள் என்ன என்பதை நினைத்துப்பாருங்கள்
இந்த தாழ்வு மனப்பான்மை எதனால் வந்ததோ அதை சரிசெய்ய முயற்சி செய்யுங்கள்
பிறரை நம்புங்கள்
உயர்வதற்கு
வாய்ப்புகளை நம்புங்கள் முயல்வதற்கு
சவால்களை நம்புங்கள்
வளர்வதற்கு
உங்களை நம்புங்கள்
வாழ்வதற்கு
6 வெற்றி
வெற்றிக்குத் தேவையான
அனைத்து சாத்தியக் கூறுகளையும் வகுத்து அதை நோக்கிய பயணத்தைத் துவங்குங்கள்
எந்த நிலையிலும்
பின் வாங்கக் கூடாது
என்பதில் உறுதியாக இருங்கள்
சாதிக்க வேண்டும்
என்றால் அடுத்தவர் மீது
நம்பிக்கை வைக்காதே
அது உன்னை அழ வைக்கும்
உன் மீது நம்பிக்கை வை
அது உன்னை வாழ வைக்கும்
7 கவனி
உங்களை நீங்கள் தயவு செய்து கவனியுங்கள்
உடலளவிலும்
மனதளவிலும்
உங்களை நீங்கள் கவனித்துக் கொள்ளுதல் அவசியம்
உணவு , உறக்கம், மகிழ்ச்சி போன்றவற்றில் ஒருபோதும்
சமரசம் செய்யாதீர்கள்
வெற்றி
தொடக்கமும் அல்ல
தோல்வி
முடிவும் அல்ல
முயற்சி ஒன்றே
அதை முடிவு செய்யும்
8 எதிர்மறை விஷயங்கள்
உங்களுக்குள்
இருக்கும் பாசிடிவிட்டியை குறைக்கும் விஷயங்கள் எதுவாயினும் அதை
அடியோடு தவிர்த்து விடுங்கள்
எதிர்மறை சிந்தனைகள், செயல்களை ஆரம்பத்திலேயே தவிர்த்து விடுதல் நல்லது
சுற்றங்கள்
குற்றங்கள் காண்பதற்கே
முடங்கி விடாதே
நீ முற்றம்
தாண்டினால் தான்
உனக்கு வெற்றி நிச்சயம்
9 ஊக்கம்
நாம் தோல்வியின்
முகத்தில் இருந்தாலும்
மற்றவர்களை
ஊக்கப்படுத்துங்கள்
பல நேரம்
மற்றவர்களை ஊக்கப்படுத்துவதாலும்
நம் மீதான
தன்னம்பிக்கை அதிகரிக்கும்
அதனால் பாசிடிவ்
எண்ணங்கள் அதிகம் தோன்றும்
தோல்விகளில்லாத வெற்றி
என்பது வார்த்தைகளில்லாத
புத்தகம் போன்றது
மேலே குறிப்பிட்டுள்ள விஷயங்களை பின்பற்றினாலே தன்னம்பிக்கை அதிகரித்து
நீங்கள் நினைத்த இலக்கை
நிச்சயம் எட்டுவீர்கள்
நிறைவாக
உங்களிடம் யாராவது வந்து உண்மையாகவும், நேர்மையாகவும் இருந்து என்ன சாதித்த விட்டாய்
என்று கேட்டால்
தைரியமாக சொல்லுங்கள்
உண்மையாகவும்
நேர்மையாகவும் இருப்பதே
பெரிய சாதனை தான் என்று….
பழி சொல்லத்
தெரிந்த யாரும்
உனக்கு வழி
சொல்ல போவதில்லை…
உன் வாழ்க்கை உன் கையில்!!!!!!
என்றும் அன்புடன்
Dr ஆண்டாள் P சொக்கலிங்கம்