September 15 2018 0Comment

உசுரு போய்டணும்

உசுரு போய்டணும்

உசுரு போய்டணும்

சில விஷயங்களை 

பார்த்த பிறகு,

அனுபவித்த உடனே…..

அப்படி ஒரு சம்பவம்

நேற்று பாண்டிசேரியில் வைத்து 

நடைபெற்றது

2 மாதத்திற்கு முன் 

எனக்கு 

எழுதப்பட்ட 

கடிதம் 1 வாரம் முன்

கிடைக்கப்பெற்றது 

நண்பர் மூலமாக….

கடிதம் கிடைக்கப்பட்ட உடன் 

கடிதம் எழுதியிருந்த 

அந்த அம்மாவிடம்

சொல்லி இருந்தேன்

பாண்டி வந்தால் சந்திப்பததாக 

நேற்று பாண்டி 

சென்றதால்

சந்திப்பு

உருவம் பெற்றது

சொன்னாள் சுருக்கமாக

பரம்பரை பணக்காரி

தன் கதையை

சோகமே வாழ்க்கை

நன்கு வாழ்ந்தவளுக்கு

வயது 76 என்றாலும் 

உழைத்து தான் 

உண்ண வேண்டும்

என்கின்ற உயர்ந்த எண்ணம்

கொண்டவளுக்கு

என்னிடம் கேட்க

ஒரு கேள்வி ஒன்று

பாக்கி இருந்ததால்

அவள் கேட்கட்டும்

என அவளிடம் அவள் முகம் 

பார்த்து நின்ற போது

உன் பார்வையே போதும் 

என்று வாய் நிறைய வாழ்த்து

கூறி நாமக்கல்லில்

சந்திப்பதாக கூறி கிளம்ப

எத்தனித்தபோது 

நான் 

புரிந்து கொண்ட விஷயம்

யானை படுத்தாலும்

குதிரை மட்டம் தான்

கெட்டாலும் மேன் மக்கள் 

மேன் மக்களே…..

வாழ்ந்தவன் விழக்கூடாது

விழுந்தாலும் எழுந்தபின்னே 

நிரந்தரமாக அவனிடத்தில் 

மட்டுமே விழ வேண்டும்

இந்த வாழ்க்கை எத்தனை

விதமான மனிதர்களை

இன்னும் காட்ட எத்தனித்துள்ளதோ 

யாம் அறியோம்

ஆனால் போதையில்

பெரிய போதையை 

எது கொடுக்கும் என என்னிடம் 

கேட்டால் 

அதை வெறி பிடித்த 

வெற்றியாளர்கள் சந்திப்பே

கொடுக்கும் என சொல்லுவேன்

வறுமையிலும் யாசகம் பெறக் கூடா 

மன நிலை

வறுமையிலும் 

நேர்மையான சிந்தனை 

வயதானாலும் உழைத்து முன்னேற

துடிக்கும் மன நிலை

என சந்திக்கும் எல்லோரும் 

பாடம் நடத்துவதில்லை

இவளோ எனக்கு 

படமே காண்பித்து சென்று உள்ளாள்

இது போன்று சந்திப்புகள்

ஒருவனுக்கு

இன்னும் சில கிடைத்தால் போதும்

சிறகு இல்லாமலேயே 

பறந்து விரிந்து

ஒவ்வொரு நொடி 

வாழ்க்கையுமே 

வளம் பெருக்கி

விருந்தாக்கி கொள்ள முடியும்

ஆண்டாளை பார்க்கும் போது

உசுரு போய்டணும் 

இந்த நொடி என்கின்ற எண்ணம்

வந்துபோகும்

அதற்கு காரணம்

இதற்கு மேல் 

ஒரு சந்தோஷம் இனி இவ்வுலகில்

இருக்க முடியாது 

என்கின்ற எண்ணத்தால்

சில சமயம் இது போன்று 

எண்ணம் வரும் அளவிற்கு 

ஓரிரு

சம்பவங்கள் நடைபெற்று இருந்தாலும்

ஏனோ இந்த தாயை

பார்த்தபோது 

ஆண்டாளை பார்கின்றபோது 

ஏற்படும் அதே உணர்வு தான்

ஏற்பட்டது

அந்த உணர்வு

ஒரு மனிதனின் சந்தோஷத்தின் 

உச்சகட்ட உணர்வு 

அந்த உணர்வின்  பெயர் 

உசுரு போய்டணும்

சந்திப்புகள் தொடரும் 

Dr.ஆண்டாள் P சொக்கலிங்கம்

 

 

 

Share this:

Write a Reply or Comment

ten + 11 =