October 26 2021 0Comment

இலக்கும் வழியும் ஒன்றே சிறகுகள் 6

 

இலக்கும் வழியும் ஒன்றே சிறகுகள் 6

திருச்சியில் இருந்து சென்னைக்குச் செல்ல விரும்பும் ஒருவர் அவரது இலக்கான சென்னையை அடைய பேருந்தை புகைவண்டியை விமானத்தை உபயோகிக்கலாம். சொந்த வாகனத்தையையும் உபயோகித்து இலக்கான சென்னையை அடையலாம்
என்பதை நினைவில் கொள்க.

அதேபோல் இறைவனை அடைவதைப் பொறுத்தவரையில் அடைய வேண்டிய இலக்கு இறைவன் தான் என்கின்றபோது அதை அடைவதற்குரிய வழிகள் நிறைய இருந்தாலும்

இறைவனை அடைய இறைவனே ஒரே வழி உங்கள் சொந்த வாகன உபயோகம் போல.

ஆகவே உங்களை படைத்தவனை, உங்களை வழி நடத்துபவனை கசிந்துருகி காதலிக்க ஆரம்பியுங்கள் இந்த நொடி முதல்.

இரை தேடும்
பயணத்தில்
இறையையும்
உன்னையும் படைத்த இறைவனையும் தேட ஆரம்பியுங்கள்.

எனக்கு இலக்கு ஆண்டாள்…
என் வழியும் ஆண்டாள்…

உங்களுக்கு??????

என்றும் அன்புடன்
Dr.ஆண்டாள் P சொக்கலிங்கம்

No photo description available.

Share this:

Write a Reply or Comment

eleven − 9 =