October 27 2021 0Comment

இறை குறிப்புகள் சிறகுகள் 7

இறை குறிப்புகள் சிறகுகள் 7

Servion என்கின்ற மென்பொருள் நிறுவனத்தில் நான் பணியாற்றிக் கொண்டிருந்த போது சுப்பு என்று ஒரு அதிகாரி எனக்கு அறிமுகமானார்.
நல்ல நட்பு என்பதால் ஒரு முறை என்னை கவிஞர் பிறைசூடனை பார்க்க சொன்னார்.
அதற்கு காரணம் நான் வேலை பார்த்த நிறுவனத்திற்கு என்று அதன் பயிற்சிப் பிரிவுக்காக ஒரு துணை நிறுவனம் இருந்தது. அதை நான் வாங்க முயற்சி செய்த போது சில குழப்பங்கள் எனக்கு இருந்தது.
அப்போதுதான் காமேஷ் @ திரு சுப்பு அவர்கள் கவிஞர் பிறைசூடன் என்னுடைய நெருங்கிய குடும்ப நண்பர். நீ கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் புதிய தொழில் தொடங்க ஆசைப்பட்டு இந்த பயிற்சி தொழில் நிறுவனத்தை வாங்க இருப்பதால் தயவுசெய்து அவரிடம் சென்று வாங்கலாமா வாங்க கூடாதா என்று கேட்டு பின் முடிவு செய்வோம் என்று என்னை அனுப்பி வைத்தார்.
நானும் அவரை சந்தித்தேன். அவர் என் முகத்தை & ஜாதகத்தை பார்த்து சொன்ன முதல் விஷயம் நீ அந்த பயிற்சி நிறுவனத்தை வாங்காதே.அதில் வம்பு வழக்குகள் நிச்சயம் உண்டு.
மேலும் நீ இப்பொழுது திருப்பதி பெருமாளை கும்பிட மாட்டாய். ஆனால் ஒரு கட்டத்தில் திருப்பதி பெருமாளே கதி என கிடைப்பாய். திருப்பதி பெருமாளால் உனக்கு நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும்.ஒரு கட்டத்தில் அந்த பெருமாளுக்கு நீ செய்ய வேண்டிய சில விஷயங்களை செய்தபிறகு உன் கவனம் மலையை நோக்கி திரும்பும்.
நீ பேசுவது உனக்கு புரியும்.
பிறருக்கு புரிவது கடினம்.
நீ பேசுவது ஒருவனுக்கு புரிந்துவிட்டால் அவனுக்கு நீ வரப்பிரசாதம்.
பெண்ணால் மட்டுமே உனக்கு ஏற்றம்.உன் ஏற்றத்திற்கு மதுரைக்கு கீழ் உள்ள தெய்வம் பெரிய அளவில் உதவும்
பலரது வாழ்க்கையில் ஒளியாய் இருக்க போகும் நீ உன் இறுதி காலத்திற்கு முன் ஒளியை நோக்கிய பயணத்தை ஆரம்பித்து இருப்பாய்.
வள்ளலார் போன்ற ஒருவர் உன் வாழ்வின் சில அவிழ்க்க முடியாத
முடிச்சுக்களை உனக்காக அவிழ்த்து கொடுப்பார்.
கவிஞர் பிறைசூடன் சொன்ன அத்தனை விஷயங்களும் இதுவரை 100% சரியாக என் வாழ்க்கையில் நடந்து இருக்கின்றது.
இன்றைக்கு அவர் உயிருடன் இல்லை.
ஆனால் அவர் ஏதோ ஒரு விதத்தில் எனக்கு
கலங்கரை விளக்கமாக இருந்திருக்கின்றார் அன்று.
ஒருகால் அவர் என் வழியில் இல்லாமல் இருந்திருந்தால்
அவர் எனக்கு அறிவுரை சொல்லாமல் இருந்திருந்தால்
இது நான் அடிக்கடி யோசிக்கும் விஷயம்.
என்னுடைய பதில் இல்லாத கேள்விகளில் இதுவும் ஒன்று.
இதன் மூலமாக நான் உங்களுக்கு சொல்ல விரும்புகின்ற விஷயம்
உங்கள் வாழ்க்கையிலும் நீங்கள் வணங்குகின்ற நீங்கள் நம்புகின்ற கடவுள்
ஒரு இறை தூதனை தேவைப்படும் நேரத்தில் நிச்சயம் அனுப்பி வைப்பார்
உங்களுக்கு நேரம் நல்லதாக இருக்கின்ற பட்சத்தில் இறைத்தூதரின் இறை குறிப்புகள்
உங்களை நிச்சயம் வழி நடத்தும் நித்தம் நித்தம் இறை குறிப்புகள் நம்மை சுற்றிதான் இருந்து கொண்டிருக்கின்றது அதை உணர நாம் தான் நம்மை தயார் நிலையில் வைத்துக் கொள்வதில்லை.
தயவுசெய்து உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்
என்றும் அன்புடன்
Dr ஆண்டாள் P சொக்கலிங்கம்
May be an image of 1 person, sitting and indoor
Share this:

Write a Reply or Comment

1 × 3 =