August 27 2021 0Comment

இறகு

எனக்கு மனதில் தோன்றிய விஷயங்களை படம் பிடிப்பதில் ஆர்வம் அதிகம் உண்டு
அந்த வகையிலே
இன்று நான் எடுத்த புகைப்படம் இந்த ஒத்த இறகு..
இறகுடன் பறவையை பார்த்தால் கூட அதன் அழகு தெரியாது –
ஒத்தையாக அனாதையாக விழுந்து கிடக்கும் இறகை பார்க்கும் போது தான் அதன் உண்மை உங்களுக்கு முழுமையாக புரியும்;
ஒத்த இறகை விட்டுச் சென்று விட்டு எங்கேயோ பறந்து கொண்டிருக்கும் அந்த பறவையின் அழகு….
ஒத்த இறகு எனக்கு எப்போதும் ஒரு ஆறுதலை கொடுக்கக் கூடியது
நீ கூட்டத்தில் ஒருவன் அல்ல தனி ஒருவன் என்கின்ற உண்மையை உரக்கச் சொல்லிக்கொண்டே இருப்பது இந்த ஒத்த இறகு தான்.
ஆட்டம் முடிந்ததும் எல்லோரும் குப்பை தான் என்கின்ற உண்மையை எப்போதும் என்னுள் உரக்க சொல்லி கொண்டே இருப்பது இந்த ஒத்த இறகு தான்.
ஒத்த இறகை இனி எப்போதும்
முடிந்த ஆட்டத்தின் சகுனமாகவே
பார்க்கக் கூடிய வகையில் அமைந்து போனது இன்றைய நிகழ்வு….
இன்று பார்த்து சிந்தித்து முடிந்த பின் செய்தி வருகின்றது நல்ல நண்பர் போடி ஆனந்த் உயிரோடு இல்லை என்று.
வாழ வேண்டிய வயதில் உடல் சாவு.
ஷிரிடி சாய்பாபா மேல் அளப்பரிய காதல் கொண்ட ஆனந்த், அவருக்கு சேவை செய்வதற்காக அவரின் அழைப்பின் பேரில் அவருடன் இருப்பதாக நினைத்துக் கொள்கிறேன் இனி…
இன்னும் இந்த சுவர் எத்தனை மரணங்களை பார்க்கப் போகின்றதோ??????
என்றென்றும் அன்புடன்
Dr. ஆண்டாள் P சொக்கலிங்கம்
Share this:

Write a Reply or Comment

17 − 3 =