இரும்பு கோட்டை முரட்டு சிங்கங்கள்:


சமீபத்தில் சென்னையில் உள்ள ஒரு கோவிலின்
வாசலில் ஒரு ஐந்து மணி நேரம்
அமர்ந்து அங்கு நடக்கக் கூடிய விஷயங்களை
பார்க்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.
நம்முடைய மக்களை
கூர்ந்து கவனித்தபோது
பாஸ்ட் புட்,
பாஸ்ட் வேலை,
பாஸ்ட் தூக்கம்,
பாஸ்ட் பிறப்பு,
பாஸ்ட் இறப்புக்கு
மத்தியிலே வாழ்ந்து
கொண்டிருக்கின்றார்கள்
என்கின்ற உண்மை
நன்கு புரிந்தது எனக்கு.
எல்லா விஷயத்திலும்
அவசரம்
என்கின்ற உண்மை
ஒவ்வொருவரின் செல்களிலும்,
நாடி நரம்பெல்லாமும்
ஊறிவிட்டது என நம்புகின்றேன்
ஏன் இந்த அவசரம்
என்று புரியாமலே
அவசரமாக பிறந்து
அவசரமாக வாழ்ந்து
அவசரமாக செல்லும்
மக்கள் தங்கள் அவசர வாழ்க்கையில்
கோவிலுக்கு சென்று
இறைவனை வணங்குவதிலும் அவசரப்படுவதில்
அதிசயம் ஒன்றும்
இருக்க முடியாது என்பதுதானே
சரியாக இருக்க முடியும்….
வாழ்க அவசரம்
வெட்கக்கேடாக உள்ளது
இவர்கள் கோவிலுக்கு வெளியே
நின்று இறைவழிபாட்டில் ஈடுபடுவதை பார்க்கும்போது……
உளவியல் ரீதியாக
இது போன்ற அவசர எண்ணங்கள் கொண்ட
மக்கள்தான் அதிகம் ஏமாற்றப்படுகிறார்கள்
ஏமாற்றுபவர்களால்……
இவர்களை இனி நீங்கள்
எங்கு பார்த்தாலும்
தட்டி கேளுங்கள்
அவர்கள் தவறை
சுட்டி காட்டுங்கள்
தவறை இவர்கள் திருத்தி கொள்ளாத
பட்சத்தில் இவர்களை
இரும்பு கோட்டை முரட்டு சிங்கங்கள்(இகோமுசி)
என அழைக்கலாம்
தைரியமாக
நீங்கள் பிரம்மாண்டமான
வெற்றி பெற வேண்டுமென்றால்
பொறுமையையும் / நிதானத்தையும்
கடைபிடித்து இந்த அவசரம்
தவிர்த்து
பிரம்மாண்ட
வெற்றி பெற
என்னுடைய
அன்பான வாழ்த்துக்கள்
அவசரம் அதி ஆபத்தானது
கவனம் இருக்கட்டும்……
டாக்டர் சிக்மண்ட் சொக்கு